Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இசைக்கும் இதயத்திற்குமுள்ள தொடர்பை உறுதிப்படுத்தியவர் லுட்விக் வான் பீத்தோவன் | Beethoven
சிம்பொனி (இன்னிசை) என்பதற்கு சொந்தக்காரர் என்றால் அது பீத்தோவனை மட்டுமே சேரும். பீத்தோவன் இளம் வயதில் வயலின் வாசிக்கின்றபோது நாம் நம்பமுடியாத அளவிற்கு மோசமாக வாசிப்பார். ஆனால் அவர் தொடந்து வயலின் பயிற்சி செய்யாமல் அந்த நேரங்களில் இசை அமைப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார். இதனால் அவருடைய ஆசிரியர்கள் இவன் வயலினிலும், இசை அமைப்பதிலும் ஒரு காலமும் வெற்றிபெறமுடியாது என்று சொன்னார்கள். ஆனால் பீத்தோவன் தொடர்ந்து முயற்சிசெய்தார். உலகின் புகழ்பெற்ற இன்னிசையை அமைத்தார். அதுவும் என்ன சிறப்பென்றால் அவருடைய சிறந்த 5 சிம்பொனிகள் அவர் கேட்கும் திறனை இழந்தபின்னர் அவர் உருவாக்கியது. ஆக, சாதிப்பதற்கு எதுவும் தடையில்லை. இசைக்கும் கேட்பதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என நாம் நினைப்போம். ஆனால் இதயத்தில் திடமிருந்தால் எதுவும் செய்யலாம் என்பதற்கு பீத்தோவன் ஒரு வரலாறு.
17 டிசம்பர் 1770 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். இவர் ஒரு இசையமைப்பாளர், பியானோ வித்தகர். மேற்கத்திய இசையில் ஒரு மங்காத இடத்தை தக்கவைத்துள்ளார். 1770-1802 தொடக்கக் காலத்தில் பல்வேறு நிலைகளில் தேடலில் ஈடுபட்டார். 1802-1812 இல் ஜோசப் ஹைடன், மோசாட் இவர்களின் வழியில் தன்னுடைய தனித்திறமையை இசையில் வளர்த்தார். இந்த நிலையில் அவர் புகழ்பெற ஆரம்பித்தார். அதே வேளையில் தன்னுடைய கேட்கும் திறனை இழந்து வருந்தினார். தன்னுடைய குடும்பத்தில் பிரச்சனைகள், தன்னுடைய சகோதரன் கஸ்பாரின் இறப்பு. அவருடைய குழந்தையை வளர்ப்பதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை என்று பலநிலைகளில் மனவேதனையடைந்தார். அவருடைய படைப்புகள் சற்று தேங்கின. இருந்தபோதிலும் மீண்டும் எழுந்துவந்தார். 1812-1827 அவர் இசையின் அமைப்பதிலும் அதனை வெளிப்படுத்துதலிலும் ஒரு புதுமையைப் புகுத்தினார். 26 மார்சு 1827 இல் இறந்தார். அவருடைய அடக்கச்சடங்கில் 10000 அதிகமானோர் கலந்துகொண்டனர்.
புரட்சி தளபதியாக அறிமுகமான நெப்போலியனால் ஈர்க்கப்பட்டு அவர் பெயரில் தன்னுடைய சிம்பொனியை 1798 இல் உருவாக்கி, அதற்கு நெப்போலியன் போனபார்ட்டே என்று பெயரிட்டார். ஆனால் நெப்போலியன் தன்னையே அரசனாக்கிக்கொண்டதால், நெப்போலியன் என்ற பெயரை அதிலிருந்து அழித்துவிட்டு, போனபார்ட்டே என்று அழைத்தார். அதாவது ஒரு மபெரும் மனிதனின் நினைவைக் கொண்டாட (டு செலபரேட் த மெமரி ஆப் எ கிரேட் லிடர்).
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்கள்தான். தோற்றுக்கொண்டே வாழ்ந்த இவர்கள்தான் சாதனையாளர்களாகவும் வரலாறுகளாகவும் மாறியிருக்கிறார்கள், மாறுகிறார்கள். தடைகளைத் தகர்தெரிந்தார்கள், வாய்ப்புகள் தவறும்போதும், மறுக்கப்படும்போதும் அவர்கள் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். அவர்களே வாய்ப்புகளாக மாறினார்கள்.
Add new comment