Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பும் அரவணைப்பும்...
அன்பும் அரவணைப்பும் புதுமைகள் செய்யும் புரிந்துகொள்ள முடியாத சூழலில்கூட உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சீனாவில் ஹீபே பகுதியில் வாழ்ந்துவரும் லீ சுகூகா – சாங் க்கைகான் தம்பதியினர் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் 5 ஆண்டுகளாக சுயநினைவில்லாமல் படுத்த படுக்கையாய் கிடந்தார். மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தனது கணவருடன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் செலவழித்து, அவருக்கு பிடித்தவற்றை பாடலாகவும், படமாகவும், உரையாடலாகவும் செய்து வந்தார் அவருடைய மனைவி சாங்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுய நினைவைத் திடீரென பெற்ற இவர். தனது மனைவியைப் பார்த்து நான் உன்னை என் மனதார காதலிக்கின்றேன் என்று சொன்னார். மருத்துவ உலகம் ஆச்சரியப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சைகள் கொடுத்து, நலமுடன் வாழ வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. அன்பும் அரவணைப்பும் எப்பொழுதும் இருந்தால் எல்லா நோய்களும் குணமாகும்.
உங்களுக்கு தெரிந்த இதுபோன்ற அரிதான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். குடும்ப உறவுகள் மேம்பட இது உங்கள் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Add new comment