122 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் மருத்துவரை கௌரவித்த கூகுள்


Picture Credits: This doodle was showcased by Google in its homepage on May 29

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்ற எண்ணம் நிலவிய காலத்தில் பிறந்தவர் மார்க்ரெட் லின் சேவியர். இவர்  1898 ஆம் ஆண்டு பாங்காக்கில் போர்த்துகீசிய வம்சாவளியை சேர்ந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர். தாய்லாந்து நாட்டின் முதல் பெண் மருத்துவர் இவரே. இவர் பிறந்து 122 ஆண்டுகளுக்கு பிறகு, இவரை பற்றிய கவனத்தை தாய்லாந்து மக்களுக்கு  கூகுள் டூடுள் மூலக கொண்டுசென்றுள்ளது கூகிள் நிறுவனம்.

கூகுள் டூடுள் என்பது, தனது தேடுபொறியில் முதல் பக்கத்தில் தனது முத்திரை சின்னத்திற்கு பதிலாக, தற்காலிகமாக வேறு ஒரு சின்னத்தை மாற்றி அமைப்பதாகும். அதாவது வரலாற்றில் மிகவும் முக்கியமான நாட்களை அல்லது நபர்களை குறிப்பிடுவதற்கான முயற்சியே அது.

மே 29 அன்று, சேவியரை, கூகுளின் முத்திரையாக ஒரு பெண் மருத்துவரின் கைகளில் புதிதாக பிறந்த குழந்தை இருப்பது போன்று சித்தரித்து இவரை பெருமை படுத்தியது. 

கத்தோலிக்க குடும்பத்தை சேர்ந்த சேவியர், மிகவும் கண்டிப்பான சமுதாயத்தில் வளர்ந்தவர். எனினும், லண்டன் சென்று தனது மருத்துவ படிப்பை மேற்கொண்டுள்ளார். தனது 26 வயதில் மருத்துவரான இவர், பாங்காக்கில் பணியாற்றினார். 

மகப்பேறியள் மற்றும் மகளிர் மருத்துவத்தில் சேவைகள் புரிந்த இவர், பலருக்கு இலவசமாக சிகிச்சைகள் அளித்துள்ளார். 1920 இல் தனது சொந்த மருத்துவ சிகிச்சையகத்தை நிறுவியுள்ளார். இவர் 1932 ஆம் ஆண்டு தனது 32 வயதில் என்செபாலிடிஸ் நோயினால் இருந்தார். 

இவரது கால் சுவடுகளை பின்பற்றி, கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி தாய்லாந்தில் 61,000 பெண் மருத்துவர்கள் உருவாகியுள்ளனர் என தாய்லாந்து மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Add new comment

6 + 0 =