வலைத்தளங்களில் அமோகமாகும் விற்பனை!


Dry Fish

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கேமரூன் ஹைலண்ட்ஸில் உள்ள டியோனஸ் தோட்டத்தின் உரிமையாளர் ஸ்டீவ் டீஹ். அங்கு அவர் சோளம் மற்றும் பூக்கள் விற்பனை செய்கிறார். கொரோனா தொற்றுநோய் பரவுதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இந்த நாட்களில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக பூக்கள், பழங்கள், காய்கறிகள், மீன்கள் முதலியன விற்பதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுடன் இணைக்க, முதல் முறையாக இ-காமர்ஸ், அதாவது வலைத்தளங்களில் பொருட்களை விற்பனை செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறை, தென்கிழக்கு ஆசிய முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களால் பின்பற்றப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவானது மலேசியாவில் மார்ச் 2 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. "ஊரடங்கு அமல்படுத்தியவுடன், பூக்களையெல்லாம் தூக்கியெறிய வேண்டிய நிலை தான் வரும் என்று நினைத்தேன். ஏனெனில் ஒரே இரவல் எல்லாம் மூடப்பட்டுவிட்டது", என்று ஸ்டீவ் டீஹ் கூறினார். 

ஆனால் அதிர்ஷ்டவசமாக சிங்கபூரைச் சார்ந்த வணிக வலைத்தளமான லசாடா, டீஹ் அவர்களுக்கு தனது பூக்களை வலைத்தளம் மூலமாக விற்பனை செய்வதில் உதவியது. அவருக்கு மட்டுமின்றி, மலேசியாவில் உள்ள மற்ற பழம் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கும் உதவியுள்ளது.

இதுபற்றி மைபிஷ்மேன் என்ற மலேஷியா சார்ந்த வலைதள மீன் விற்பனை சமூக உரிமையாளர் கூறுகையில், "கொரோனாவின் தாக்கத்தால் அனைத்து உணவகங்கள், மொத்தவிலை மீன் சந்தைகள் என எல்லாம் மூடப்பட்டபோது எங்களை இன்னும் முன்னோக்கி செல்லவைத்துக்கொண்டிருப்பது இந்த வலைதள சேவைகள் மட்டுமே" என்றார். இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் 2 வாரங்களில், மைபிஷ்மேன் வலைத்தளத்தில் 150% விற்பனை அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add new comment

1 + 9 =