வயிற்றில் 800 கிராம் எடையுள்ள சாவிகள், நாணயங்கள், சில்லடுகள்…


Surgeons remove nails, knives and screws from man's stomach New York Post

ராஜஸ்தான் மாநிலத்தில் உடையப்பூர் பகுதியில் வயிற்றுவலி காரணமாக ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அவருடைய வலி நின்றபாடில்லை. மருத்துவர்கள் அடுத்தக் கட்டமாக அவரை ஸ்கேன் எடுக்கும்படி அனுப்பிவைத்தார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் வந்தபோது அதைக் கண்ட மருத்துவர்கள் திகைத்துப்போய் நின்றார்கள். காரணம் அவருடைய வயிற்றில் இரும்புத்துண்டுகள், இரும்புத் தகடுகள் இருப்பதாக கண்டறிந்தார்கள்.

உடனடியாக அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடைபெற்றது. ஏறக்குறைய 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அறுவைச் சிகிச்சைக்குபின் அவர்கள் எடுத்த பொருள்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றில் 800 கிராம் எடையுள்ள சிறிய சாவிகள், நாணயங்கள் மற்றும் புகைப்பட சில்லம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை உண்ட அந்த நபர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 

Add new comment

8 + 11 =