ராஜஸ்தான் தேர்தல் – மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளர் நிறுத்த காங்கிரஸ் வியூகம்


Election- Congress

ராஜஸ்தானில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்ணுக்கு வேட்பாளராக வாய்ப்பு வழங்க போவதாக காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. கோட்டா தொகுதியில் சமீபத்தில் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பெண்களுக்கு 40 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார். ராகுல் காந்தியின் விருப்பத்தை அமல்படுத்தக் கொஞ்சகாலம் ஆகலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்க முயல்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரோஹன் குப்தா கூறியிருக்கிறார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதால், இந்தத் தேர்தலில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்கிறது.

Add new comment

3 + 0 =