யூத சபைகளுக்காக சிறப்பு காணிக்கை திரட்டும் பீட்ஸ்பர்க் பங்குகள்


Place of peace

நவம்பர் 10, 11 நாட்களில் நிறைவேற்றப்படும் எல்லா திருப்பலியின்போதும் சிறப்பு காணிக்கை எடுக்க பீட்ஸ்பர்க் ஆயர் டேவிட் சுபிக் தெரிவித்திருக்கிறார். இந்த சிறப்பு காணிக்கை பிரிப்பது, ஒரு மத சமூகம் இன்னொரு சமூகத்திற்கு தெரிவிக்கின்ற அன்பும் ஒற்றுமை உணர்வுமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. பென்சில்வேனியா மக்கள் துன்புறுகையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் இங்குள்ளோம் என்று ஆயர் சுபிக் கூறியுள்ளார்.

யூத செபகூடத்தில் கொல்லப்பட்ட 11 பேருக்கும், காயமடைந்தோருக்கும், சேதமடைந்த செபக்கூடத்தை சரிசெய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். 46 வயதான பீட்ஸ்பர்க் மனிதர் ராபர்ட் பௌயர்ஸ் இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் பௌயர்ஸ், தான் குற்றம் செய்யவில்லை என மறுத்துள்ளார். 

Add new comment

9 + 5 =