பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதன தொகையின் 2வது தவணை


Indian Currency

பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த மூலதனத் தொகையின் இரண்டாவது தவணையை இந்த மாத இறுதிக்குள் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளும் தெரியவந்ததும், ஒவ்வொரு வங்கியின் நிதி நிலையைப் பொறுத்து மூலதனத் தொகை ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த மூலதன தொகையின் பெரும்பகுதியை கடன் வழங்கவே வங்கிகள் செலவழிக்கலாம். அதிலும் சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2.11 லட்சம் கோடி ரூபாய் மூலதன தொகையாக பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதில் முதல் தவணைத் தொகையாக ரூ.11,337 கோடி கொடுக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இந்த 54,000 கோடி ரூபாயை வங்கிகள் பெறவுள்ளன.

Add new comment

1 + 1 =