Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பேஸ்புக்கின் தடைகள்
இன்று அனைவரிடமும் பரவிக்கிடக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களுக்காகப் புதியக் கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது. இறந்துபோன ஒருவரைப் பற்றிய கேலி செய்திகள் மற்றும் மரணத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவதற்கு அனுமதி கிடையாத என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக இத்தகைய கருத்துக்களுக்கு தடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. காலத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு அவர்கள் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் உயிரிழந்தவர்களைப் பற்றிய பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை பற்றி குடும்பத்தினர் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரலாம். மேலும் பேஸ்புக் வைத்திருக்கும் ஒருவர் திடீரென இறந்துவிட்டால் அவருடைய பேஸ்புக் கணக்கினை Memorialized பக்கத்தில் சேர்க்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருவது இவ்வேளையில் நினைவுகூறப்படவேண்டியது. எனவே பொறுப்புணர்வுடன் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துங்கள்.
Add new comment