புற்றுநோய் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு! | Colombo


கொழும்பு துறைமுகத்தில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் இருந்த இரசாயன பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த இரசாயன பொருட்கள் குறித்து சரியான தகவல் வழங்கும் வரை அதனால் ஏற்பட கூடிய பாதிப்பு தொடர்பாக குறிப்புக்கள் அறிவிப்பது கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துளளனர்.

கப்பலில் இருந்து வெளியேறியுள்ள பொருட்களால் நீண்ட கால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் பொது மேலாளர் டர்னி பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தயவு செய்து அந்த கடல் பகுதிக்கு வருகைத்தர வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிக நச்சுத்தன்மை காரணமாக உடலுக்கு பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்த கூடும். அந்த மணல்களை தொடுவதனையும் தவிர்க்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add new comment

12 + 0 =