தாஜ் மஹாலில் உள்ளூர் இஸ்லாமியர் தொழுகை


Tajmahal with Muslims

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் உள்ளூர் இஸ்லாமியர் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை, தொல்லியல் துறை அதிகாரிகள் முதல் முறையாக கடந்த வாரம் நடைமுறைப்படுத்தினர். ஆக்ராவிலுள்ள தாஜ் மஹாலில், வெளியூர் இஸ்லாம் மக்கள் வியாழன் முதல் சனிக்கிழமை வரை மதியம் கட்டணம் செலுத்தி தொழுகை நடத்தி வந்தனர். 

உள்ளூர் இஸ்லாமியர் வெள்ளிக்கிழமை மட்டும் கட்டணமில்லாமல் தொழுகை நடத்தி வந்தனர். இதனால், தாஜ் மாஹாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, வெள்ளிக்கிழமை தாஜ்மஹாலுக்குள் வெளியூர் இஸ்லாம் மக்கள் சென்று தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. 

அது தொடர்பான முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், தாஜ்மஹாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை புரிய தடை விதித்தது. உள்ளூர் இஸ்லாம் சமூக மக்கள் மட்டுமே இந்த தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதனால், வெளியூரிலிருந்து வரும் இஸ்லாமியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாஜ்மகால் தொழுகை கமிட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தொல்லியல் துறையினர் ஏற்கவில்லை.

Add new comment

5 + 12 =