தமிழகத்தை படையெடுக்குமா வெட்டுக்கிளிகள்?


Locust

தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வருமா வராத என்ற கேள்வி பொதுவாக அனைவரின் மனத்திலும் தோன்றியிருக்கும். இதுவரை இருக்கும் நிலையை பார்க்கும் போது இந்த வெட்டுக்கிளிகள் பிற மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பயிர்களை நாசம் செய்ததோடு மக்களின் வாழ்வாதரமும் பாதிப்படைந்துள்ளது. இப்பூச்சிகளைக் கொல்ல தெளிப்பான்களை பயன்படுத்தினாலும் விளையும் பயன் பெரிதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தெளிப்பான்களை பயன்படுத்தினால் அந்த இடத்தில் உள்ள சில வெட்டுக்கிளிகள் மட்டுமே சாகடிக்கப்படுகின்றன.

எனினும் ஒரு வெட்டுக்கிளியின் வாழ்நாள் மூன்று மாதங்களே என்றாலும், அது தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடுகின்றது. ஒரு முறைக்கு 90 முட்டைகள் இடும். ஆகா சராசரியாக 270 முட்டைகளை ஒரு வெட்டுக்கிளி இட்டால் தெளிப்பான் தெளித்தும் ஒரு பயனும் இருக்காது. 

வெட்டுக்கிளிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. ஈரானில் தொடங்கி, பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்த வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தோடு அழிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது தோற்றுப்போயுள்ளது. இப்படி இருக்க அவை தமிழகத்திற்கு படையெடுத்தாலும் அதில் ஆச்சர்யம் இல்லை. 

இந்த வெட்டுக்கிளிகளை தெளிப்பான்கள் உபயோகப்படுத்தி கொன்றாலும் அதன்பின் அந்த பயிர்களை நம்மால் உபயோக படுத்த முடியாது. இது குறித்து மாநில அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து இந்த அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெட்டுக்கிளி எச்சரிக்கை மைய விஞ்ஞானிகளுடன் தமிழக அரசு விவாதித்துள்ளது. இது விந்திய சாத்புரா மலைகளை கடக்காது என்று அவர்கள் உறுதியளிக்கிறார்கள். கடந்த காலத்தில், வெட்டுக்கிளிகள் ஒருபோதும் டெக்கான் பீடபூமிக்கு அப்பால் பரவவில்லை. எனவே தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் திரள் தாக்குதலுக்கு மிக தொலைதூர வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். எவ்வாறாயினும் வெட்டுக்கிளி திரள் இயக்கத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்" என்றார். 

Add new comment

6 + 14 =