Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குழந்தைகளை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
நம்முடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை கொடுப்பது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகளவு காய்கறிகளை உணவில் சேர்த்து பழக்கப்படுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குழு ஒன்று ஆய்வுசெய்து அறிவித்துள்ளது. சர்க்கரைச் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்ட உணவுகளில் கூட தேன் அல்லது பழச்சாறு மூலமாக சர்க்கரை உடலுக்குள் செல்கின்றது எனக் கூறுகின்றது இந்த அறிக்கை.
குழந்தைகள் குறைந்தளவு சர்க்கரை உண்பதை உறுதிசெய்யும் பெற்றோர், அதே நேரத்தில் கசப்பு சுவையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பற்சிதைவு, மோசமான உடல்நிலை மற்றும் உடற்பருமனிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் எனவும், அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளதை விட அதிகளவு சர்க்கரைக் கலக்கப்படுகிறது என்றும், இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கையாக சேர்க்கப்பட்ட சர்க்கரைக் கொண்ட பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்றும் அதற்கு பதிலாக பழங்கள், பால் அல்லது சர்க்கரை கலக்கப்படுகிறது என்றும் இது மருந்து மற்றும் பழச்சாறுகளுக்கும் பொருந்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு குழந்தைகளுக்காக அதிகமாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களில் அதிக அளவிளான சர்க்கரை அல்லது இனிப்பு சுவை செயற்கையாக சேர்க்கப்படுவதாக இந்த ஆராய்ச்சிக்குழுவிலுள்ள பேராசிரியர் மேரி பியூட்ர்ல் கூறுகின்றார்.
இயற்கை மற்றும் செயற்கை என அனைத்து விதமான மூலங்களில் இருந்தும் பெறப்படும் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இயற்கையாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆனால் அதை துண்டிக்கக்கூடிய வகையில் பெற்றோர்கள் செயல்படக்கூடாது.
புரோக்கலி, கீரை வகைகள் உள்ளவிட்டவற்றையும், கசப்பு நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதற்கு பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அளவுக்கு அதிகமான சர்க்கரை உடலில் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியமானதாகும்.
ஐந்து வயதிற்குட்பட்ட 25 சதவீதத்துக்கும் மேலான குழந்தைகளை பாதிக்கும் பற்சிதைவு சர்க்கரையே காரணம். அதுமட்டுமன்றி சிறுவயதிலேயே உடல்பருமன் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
Add new comment