குடும்ப பராமரிப்பில் வியட்நாம் கத்தோலிக்கருக்கு ஆதரவு


discussion and support

விரைவாக மாறிவரும் சமூகங்களிலுள்ள உள்நாட்டில் இடம்பெயரும் ஜோடிகள் மற்றும் கத்தோலிக்க குடும்பங்கள் எதிர்கொள்ளும் திருமண உறவு முறிவு போன்ற கஷ்டங்களுக்கு மேய்ப்புப்பணி  பராமரிப்பில் முக்கியத்துவம் வழங்க வியட்நாம் ஆயர்கள் முடிவு செய்துள்ளனர். பொருளாதார சிக்கல்களால் பல குடும்ப உறுப்பினர்கள் தங்களின் பிரதேச மற்றும் ஊரக இல்லங்களை விட்டு பெரிய நகரங்களுக்கு சென்று வாழ்க்கைக்கான ஆதரங்களை சம்பாதிக்க பணிபுரிகின்றனர்.

தங்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவு உள்பட குடும்ப வாழ்க்கைக்கான செலவுகளை சம்பாதிப்பதில் சில குடும்பத்தினரே இதில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பலரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்று இந்த ஆயர்கள் அனுப்பிய சுற்றுமடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாகரத்தாகி, மறுமணம் செய்துள்ளோரை தாய் அன்போடு கத்தோலிக்க திருச்சபை நடத்த வேண்டும் என்று இந்த ஆயாகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமின் தெற்கில் அமைந்துள்ள மை தாவ் நகரில் 26 மறைமாவட்டங்களை சோந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட தேசிய கூட்டத்தை தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. எதிரான சூழ்நிலைகள் இந்த ஜோடிகள் தவற செய்வதற்கு காரணமாக அமைந்துவிடுவதால், திருமண உறவு முறிவு தொடர்பாக கத்தோலிக்கர்களை அனுதாபத்தோடு அணுக வேண்டுமென இந்த ஆயர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

வியட்நாமில் சராசரியாக 60 ஆயிரம் விவாகரத்துகள் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்கின்றன. இது பெரும்பாலும் இளம் தம்பதியரிடம் நடைபெறுவதாக குடும்ப மற்றும் பாலின ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

Add new comment

3 + 1 =