ஆணையை மீறி பட்டாசு வெடிப்பு – 786 பேர் மீது வழக்கு


Crackers

தமிழகத்தில், உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 786 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறினால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி,  தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 97 பேர், கடலூரில் 13 பேர், விழுப்புரத்தில் 255 பேர், நாமக்கலில் 7 பேர், ஈரோட்டில் 7 பேர், தஞ்வாவூரில் 10 பேர், சேலத்தில் 50 பேர், கொடைக்கானலில் 2 பேர், வேலூரில் 2 பேர், நெல்லையில் 31 பேர், விருதுநகரில் 80 பேர், கோவையில் 85 பேர், திருப்பூரில் 57 பேர், அரியலூரில் 14 பேர் என இதுவரை 786 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add new comment

6 + 0 =