மாற்றம் அடைந்திட|அருட்தந்தை அருண்


இன்றைய வாசகங்கள் (06.08.2020) - பொதுக்காலத்தின் 18 ஆம் வியாழன் - ஆண்டவரின் உருமாற்ற திருவிழா - I. தானி. 7: 9-10,13-14; II. திபா. 97:1-2,5-6,9; III. 2 பேது. 1:16-19; IV. மத். 17:1-9

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற பெருவிழா

“உள்ளத்தில் மாற்றம் கொண்டு வாழ”

 இறைஇயேசுவில் அன்புக்குரியவர்களே  அன்னையாம்  திருஅவை ஆனது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற பெரு விழாவினை  கொண்டாடிட இறை மக்களாகிய நமக்கு  அழைப்பு விடுக்கின்றது.

 இவ்வுலகில்,  மாற்றம் என்பது எல்லாவற்றிலும்,  எல்லா மனிதர்களிடமும்,  எல்லா பொருள்களிலும்  மாற்றத்தை கொண்டதாக  இருக்கின்றது.  ஆக, உண்மையில்  மாற்றம் என்றால் என்ன ?, பழைய நிலையிலிருந்து  புதிய நிலைக்கு மாறுவது  என்று எல்லா மக்களும்  கூறுகின்றார்கள்.  சினிமாவாக இருந்தாலும்,  விளம்பர படங்களாக இருந்தாலும்,  உணவு பழக்கவழக்கங்கள்,  உடுத்தும் உடைகள்,  வாழும் இடங்கள்  மற்றும்  எல்லாப் பொருள்களிலும்,  ஏன்  மனிதர்கள் கூட  மாற்றம் கொண்டு வாழ்ந்தால் தான்,  (இருந்தால்தான்) நன்றாக இருக்கின்றார்கள்,  அல்லது  அந்தப் பொருட்கள்  கவர்ச்சிகரமாக  நன்றாக  இருக்கின்றது  என்று சொல்கின்றோம்.  எல்லாவற்றிலும் மாற்றத்தை எதிர் பார்க்கின்றோம்.  ஆனால்  நமது உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டு  இருக்கின்றதா ? பழைய பாவ நிலையிலிருந்து  அல்லது  பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பி மனமாற்றம்  ஏற்பட்டுள்ளதா ? என்று  நம்மையே பரிசோதனை செய்தால்,  நம்மில் எத்தனை நபர்கள்,  எனது வாழ்க்கையிலே,  எனது உள்ளத்திலே  மாற்றம் கண்டு  இறைவனுக்கு ஏற்றார்போல்  வாழ்கின்றேன்  என்று சொல்ல முடியும் ?  உண்மையில் இது ஒரு மிகப்பெரிய  கேள்விக்குறியாகத்தான் நம்மில்  பல  நபர்களுக்கு  இருக்கும்  அல்லது  பழைய நிலையில் தான்  பாவ வாழ்வில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்  என்பதே  பதிலாக இருக்கும்.

 இன்றைய நற்செய்தியில் வாசிக்க கேட்கின்றோம்…... தொழுகை செய்யும் இடத்திலிருந்து  சற்று உயரமான மலைப் பகுதிக்கு மூன்று  திருத்தூதர்கள் மட்டுமே அழைத்துச்சென்று  தாபோர் மலையில் இயேசு உருமாற்றம் அடைகின்றார். (இதைக்கண்ட)  இந்த அற்புதத்தை (ரசித்த)  அனுபவித்த  மூன்று அப்போஸ்தலர்களும் ஏற்கனவே நாம் முன்பு பார்த்த  உறவாடிய  அந்த இயேசுவைப் போன்று இல்லாமல்  சற்று மாறுபட்டு இருக்கின்றாரே என்று சொல்லி  “ஆண்டவரே நாம் இங்கேயே இருந்து விடலாம்…..” பழைய வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்திடுவோம் என்ற எண்ணத்தில் கூறுகின்றார்கள்.  அப்போஸ்தலர்கள் தங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று  ஆசைப்பட்டு கூறுகிறார்கள்.  நமது இறைவன் இயேசுவும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்பி தான்  நாம் வாழ்கின்ற வாழ்க்கை எப்போதும் இன்பம் உடையதாக இருக்காது அதில் மாற்றம் ஏற்படும்  ஆக துன்பமும் துயரமும் இருக்கும் என்பதை வெளிப்படுத்தவே மற்றும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே, தான்துன்பப்பட இருக்கும்    நிகழ்வை   அரிய படுத்தவேண்டும் என்று சொல்லி    இந்த  உருமாற்றத்தை அப்போஸ்தலர்கள் மூவர் முன்நிலையில் பேதுரு, யாகப்பர் மற்றும் யோவான் ஆகியோரிடம் நிகழ்த்தினார். ஆக  இறைவனின் உருமாற்றம் ஆனது  இவ்வுலகில் முதன் முதலாக  இறைவன் மக்களுக்காக துன்பப்பட்டு  இறக்கப் போகின்றார் என்ற செய்தி இருக்கின்றது.  இவ்வுலகில் நாம் பார்க்கின்றோம்  மனிதன்தான்  மதத்திற்காக , இறைவனுக்காக  உயிரைக் கொடுக்கும்  பரிதாப நிலைகள்  இருந்தன.  ஆனால்  நமது கிறிஸ்தவ மதத்தில் மட்டும்தான்  மனிதனுக்குப் பதிலாக,  மனிதனுக்காக  இறைவன்  தனது  உயிரை  கொடுக்கின்றார்.  இது ஒரு பெரிய  மாற்றம்தான்.  எனவே இன்றைய  உருமாற்ற   திருவிழாவானது நமது வாழ்வில் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது  

பழைய பாவ வாழ்க்கை நிலையிலிருந்து விடுபட்டு  உள்ளத்தில் மாற்றம் பெற்றவர்களாக வாழ்ந்திட  முயற்சி செய்வோம், மாற்றம் கண்டு  வாழ்ந்திடுவோம்  என்று  இறைவனிடம் நம்பிக்கை கொண்டு  வாழ வரம் வேண்டி ஜெபிப்போம்.  இறைவன் நம் அனைவரையும்  ஆசீர்வதித்து  நமது வாழ்விலே  மாற்றம் கொண்டு,  இறைவன் இயேசுவைப் போல  உருமாற்றம் அடைந்திட  உள்ளத்தில் மாற்றம் கொண்டு வாழ்ந்திடுவோம்.ஆமென்.

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

 

Add new comment

1 + 18 =