பகைவன் | அருட்தந்தை அருண்


என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்ச மாட்டேன்

திருப்பாடல் 3 :6

என்னை சூழ்ந்திருக்கும் பகைவர் யார்?  என்ற தலைப்பிலே தியானித்து, பகைவனை இனம்கண்டு, பகைவன்-இடமும் அன்புடன் வாழ திருப்பாடல் 3 : 6 நமக்கு அழைப்பு விடுக்கின்றது. அன்புக்குரிய மக்களே,  பல நேரங்களில் நமது பகைவன் வெளியே இருக்கின்றான், எனது வளர்ச்சியை, எனது புகழைக் கண்டு பொறாமை படுகிறான், நான் மேலும்-மேலும் முன்னேறகூடாது என்று, எனது வளர்ச்சியை தடுப்பதற்காகவே  ஒரு பெரும் கூட்டம் செயல்படுகிறது அல்லது பெரும் முதலாளிகள், பணம் பதவி-பட்டம் ஆகியன கொண்டு பிறரை ஆட்டிப் படைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் அல்லது இவர்கள் என்று பிறரை தான் எனது பகைவன் என்று நம்மில் பெரும்பான்மையானோர் சொல்வது வழக்கம் தான்,  ஏனெனில்,  நாம்,  அப்பேர்ப்பட்ட அல்லது அப்படியான சமூகத்தில்தான் வளர்த்தெடுக்கப்பட்டும், வாழ்ந்தும் , ஏன் நமது தலைமுறைகளையும் அவ்வாறு தான் வாழ பழகி கொடுக்கின்றோம் ஆனால் உண்மையில் யார் எனது பகைவன்? என்று தெரியாமலே இறுதிவரை  நாம் வாழ்கின்றோம்……  யார் தான் எனது பகைவன் ? எனது பகைவன் என்று வேறு எவரும் இல்லை…… எனது பகைவன் நான்தான் …..அது எப்படி ?  அல்லது அது எவ்வாறு?  என்று  சொல்ல முடியும்  என நம்மில் பல-பேருக்கு கேள்விகள் எழுந்திடும்…..  ஆம்,  எனது பகைவன் நான்தான்….  எவ்வாறு என்று பார்க்கின்றபொழுது……  எல்லாமே  

என்னுடன் இருக்கும் சிறுசிறு செயல்பாடுகள் தான்….

  1.  அவன் சரியில்லை, இவன் சரியில்லை,  அல்லது அவள் சரியில்லை, இவள் சரியில்லை
  2.  எவரும் ஒழுங்காக சமூக-சமுதாய விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை
  3.  எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை,  கற்பழிப்பு
  4.  நாட்டில் வன்முறையும், தீவிரவாதமும் பெருகிவிட்டது
  5.  அரசியல் தலைவர்கள் சிறப்பாக மக்களை ஆளவில்லை அல்லது ஆட்சி புரிவதில்லை
  6.  மதத்தலைவர்கள் சமய -சடங்குகளுக்குதான் முன்னுரிமை கொடுக்கிறார்கள்
  7.  ஜாதி வெறி பிடித்து, கலப்பு திருமணத் தம்பதியினரை   சாகடிக்க ஒரு கூட்டம் எப்போதும் துடிப்பாக செயல்படுகிறது
  8.  பள்ளி மற்றும் கல்விக்கூடங்கள் சிறப்பாக செயல்படாமலும், மாணவ -மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது படிப்பில் கவனம் செலுத்துவதில்லை
  9.  எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது
  10.  காவல்துறையினரே தவறுகள் செய்து சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறுகிறார்கள்
  11.  நீதித்துறை சட்டத்தையும் , நிரபராதிகளையும் காக்க மறுக்கின்றது
  12.  பண்பாடும், கலாச்சாரமும் சீரழிந்து விட்டது

 என்று இவ்வாறு எப்போதும் பிறரை தான் குற்றம் சாட்டி எனது பகைவர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் உண்மையில் மேற்கூறிய எல்லாவிதமான தவறுகளுக்கும் உடந்தையாக நண்பனாக நாம்தான்…..  இல்லை இல்லை  நான்தான் _ நான்தான் ………. அறிந்திடாமல், சிந்தித்து செயல்படாமல் இருக்கும் வரை எனது   பகைவன் நான்தான் என்று நாம் அல்லது நான் ஒத்துக் கொள்ள வேண்டும்…..

 எனது பகைவன் நான்தான் என்பதை உணர்ந்து, நம்மில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொண்டு நான் அன்பானவன் என்றும் “உன் பகைவனையும் அன்பு செய்து  வாழ்ந்திடு”  என்ற இயேசு கிறிஸ்துவின், நமது இறைவனின் வார்த்தைகளை உள்வாங்கி வாழ்ந்திட முற்படுவோம்…..  இறைவன் நம்  அனைவரையும்  ஆசீர்வதித்துதிட தொடர்ந்து மன்றாடுவோம். -ஆமென்.

அருட்தந்தை அருண் sdc.

ஸ்பெயின்..

 

Comments

I correct my mistake itself and speard the love to everyone.

Add new comment

6 + 0 =