திகைக்கவைக்கும் ஆச்சரியத்தைக் கொணரும் கிறிஸ்துமஸ்...

இயேசு பிறப்பின் காலம் திகைக்க வைக்கும் ஆச்சரியத்தைக் கொண்டுவந்தது, அது அன்னை மரியாகவோ, புனித யோசேப்பாகவோ, மூன்று ஞானிகளாகவோ, ஏரோது மன்னனாகவோ, சத்திரம் நடத்தியவராகவோ இருந்தாலும் சரி. நாம் இப்பொழுது யாருக்கு திகைக்க வைக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கப் போகிறோம். அமெரிக்கவின் லாஸ் வேகாஸ் என்ற இடத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அமைப்பு பாக்ஸ் 5 ஆச்சரியப்படுத்தும் அணி (Fox 5 Surprise Squad). 

தேவையில் தவிப்போருக்கும், கடவுள் எதாவது ஒரு அதிசயம் செய்துவிடமாட்டாரா என்று செபிப்பவர்களுக்கும் அதை நினைவாக்கிக் காட்டுகிறார்கள் இவர்கள். ஆல்பர்ட்சன்ஸ் சூப்பர் மார்க்கட்டிற்கு சென்ற இந்த குழுவினர், பலருக்கும் அவர்கள் வாங்கிய பொருள்களுக்குப் பணத்தைச் செலுத்தினார்கள். 10 குழந்தைகள் அதிலும் ஒரு குழந்தைக்கு அம்னேசியா நோய். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களின் தேவையை நிறைவேற்ற ஓடிஓடி உழைக்கும் தாய்க்கு, அந்த மாதத்திற்கு தேவையான அனைத்து மளிகை சாமான்கள் மட்டுமல்ல, அடுத்த மாதத்திற்கானதும் கொடுத்தார்கள். 

அப்பொழுது அவர்களை அணைத்துக்கொண்டு அந்த தாய் சொன்னார்: எதுவும் முடிவுறவில்லை. கடவுள் எல்லாவற்றையும் நடத்திக்காட்டுவார், இப்பொழுது உள்ளது போல எப்பொழுதும் உணரலாம். இதேபோல பலருக்கும் பல வகையில், சிறிய பெரிய அளவில் திகைப்பூட்டும் ஆச்சரியத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்: எதுவும் முடிவுறவில்லை. கடவுள் எல்லாவற்றையும் நடத்திக்காட்டுவார், இப்பொழுது உள்ளதுபோல எப்பொழுதும் உணரலாம். நம்பிக்கையின் நாயகன் பிறந்திருக்கிறார். கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்.

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
 

Add new comment

10 + 10 =