இயேசுவின் நான்காவது இறுதி வார்த்தைகள் - மத்தேயு 27:46

ஏலி, ஏலி லெமா சபக்தானி? அதாவது என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? நண்பகல் பன்னிரெண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதுதம் இருள் உண்டாயிற்று. மனித குலம் ஒளியாம் இறைவனை வேண்டாம் என்றபோது, இயற்கையும் தன்னை மறைத்துக்கொள்கிறது. இருள் சூழ்கிறது. தனக்கும் இந்த குற்றபலிக்கும் தொடர்பில்லை என்பதை இயற்கை உறுதிசெய்கிறது. இயேசுவின் பிறப்பில்; பெத்லகேமில் நள்ளிறவில் பேரோளி தோன்றியது. ஆனால் அவருடைய இறப்பில் நண்பகலில் இருள் சூழ்ந்துள்ளது. என்ன முரண்பாடு. இயற்கையே தன் கண்களை மூடிக்கொள்கிறது. பகலில் சூரியன் மறைந்து கொள்கிறது. இதையே ஏற்கெனவே ஆமோஸ் இறைவாக்கினர் முன்னறிவித்திருக்கிறார்.

இப்பொழுது திருப்பாடல் 22 இங்கு நிறைவேறுகிறது. திருப்பாடலின் வரிகள்தான் இயேசுவின் அனுபவமாக இருந்திருக்கும். என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் என்பது அவநம்பிக்கையின் கதறல் அல்ல, மாறாக தனிமை தவத்தின் உச்சக்கட்டம். அவநம்பிக்கையின் ஆன்மா இறைவனைப் பார்க்காது. ஆனால் தனிமையின் தவம் கடவுளின் குரலைக்கேட்கும், அவரோடு உரையாடும். 

உலகமே எனக்குரியது என்றாலும் எல்லாமே எனக்கெதிராக இருக்கின்றது என்ற நிலைவருகின்றபோது வருகின்ற தனிமையின் உச்சக்கட்டம்தான் இது. ஆனால் நம்பிக்கையோடு உறவாடுகிறார். நம்முடைய வாழ்வில் எது நம்முடைய தனிமையின் தவம்;. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவநம்பிக்கையில் நான் கதறுகிறேனா அல்லது நம்பிக்கையில் அவர் என்னைக் கைவிடமாட்டர் என்ற நம்பிக்கையுடன் அவரை எதிர்நோக்கிக் கூக்குரலிடுகிறோமா என சிந்திக்க அழைப்பது நான்காவது இறுதி வார்த்தைகள். 
 

Add new comment

9 + 7 =