இயேசுவின் ஆறாவது இறுதி வார்த்தைகள் - யோவான் 19:30 

எல்லாம் நிறைவேறிற்று. அப்பாடா எல்லாம் நிறைவேறிற்று என்ற பெருமூச்சல்ல இது. துன்பம் எல்லாம் நிறைவேறிற்று அப்பாடா என்பதுமல்ல. மாறாக என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிவிட்டேன் என்னும் மகிழ்ச்சியின் உச்சம்தான் இது. 

எல்லாம் நிறைவேறிற்று என்ற வார்;த்தை விவிலியத்தில் மூன்று இடங்களில் பதிவுசெய்யப்படுகிறது. தொடக்கநூலில் படைப்பு செயல் முடிந்தவுடன், திருவெளிப்பாடு நூலில் புதிய வானகமும் வையகமும் படைக்கப்பட்டவுடன், மூன்றாவதாக சிலுவையில் இயேசு கூறுகின்றார். 
படைப்பின் ஏழாம் நாள் இறைவன் ஓய்ந்திருந்தார்;. ஆம் தம் வாழ்நாளெல்லாம் அரசராகவும், குருவாகவும், போதகராகவும் பணியாற்றிய இயேசு, இப்பொழுது ஓய்வெடுக்கச் செல்கிறார்.

பழைய ஏற்பாட்டில் தாவீது கோலியாத்தினை வெல்ல ஐந்து கூழங்கற்களுடன் சென்றார். புதிய ஏற்பாட்டு தாவீது தனது ஐந்து காயங்களால் அலகையை வெல்கிறார்.

அபிரகாம் மெல்கிசதேக்கு ஈசாக்கு யாக்கோபு மேசே யோசுவா தாவீது சாமுவேல் சாலமோன் ஆகியோரின் அனைத்து இறைவாக்குகள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறிற்று என்ற இந்த வார்த்தைகளில் நிறைவேறிற்று.

என் தந்தையின் அலுவலை நான் பார்க்கவேண்டாமா? என்று எருசலேம் ஆலயத்தில் தன்னுடைய தாயிடம் கேட்டவர், தன்னுடைய தந்தையின் அலுவல்களை நிறைவேற்றிவிட்டுச் செல்கிறார்.

இன்று எல்லாம் நிறைவேறிற்று என்று நாமமால் சொல்லமுடியுமா? நாம் தெரிந்து வைத்திருக்கும் இலக்கு நிறைவேறும்போது சொல்கிறோமே அதோடு நிறைவேறிவிட்டதா? என்னுடைய வாழ்விற்கு கடவுள் வைத்திருக்கும் திருவுளத்தை அறிந்து அவற்றை வாழ்வில் நிறைவேற்றினால்தான் நாமும்; எல்லாம் நிறைவேறிற்று என்று சொல்லலாம்.
 

Add new comment

14 + 3 =