கத்தோலிக்க மருத்துவர்கள் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் - திருத்தந்தை


த்தோலிக்க மருத்துவர்கள் வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

மனித வாழ்க்கையின் மாண்பை குலைக்கின்ற கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்று மருத்துவர் குழு ஒன்றுடன் பேசுகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

திருச்சபை வாழ்க்கையை ஆதரிக்கிறது. வாழ்க்கையை சீரழிக்கின்ற எந்தவொரு கொள்கை மற்றும் நடவடிக்கைகளை திருச்சபை எதிர்க்கிறது. என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

திருச்சபையின் உண்மையான போதனைகளை செயல்படுத்தவதில் கஷ்டங்களையும், துயரங்களையும் சந்திக்கலாம் என்பதை திருத்தந்தை ஏற்றுக்கொண்டுள்ளார்

நோயாளிக்கு நடுநிலைமையை உறுதி செய்து வாழ்வுரிமைக்கு முதன்மை அளிக்க வேண்டியதை மருத்துவர்கள் மறந்துவிடக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.