வியாகுலமும் அழகே! | Annie | Our Lady of Sorrow

Feast Day of Our Lady of Sorrow

"சம்சாரம் இன்னிக்கு புளிக்குழம்பு வைக்கட்டு மான்னு கேட்டா ஏங்க கோவிச்சிக்கிறீங்க....?"

"அட போங்கப்பா..! இன்னிக்கு புளிக்குழபுன்னா... நாளைக்கி சாம்பார்.. இன்னிக்கு சாம் பார்ன்னா நாளைக்கு புளிக்குழம்பு. தெரிஞ்சதே இந்த இரண்டுதான். இதுல சாய்ஸ் கேட்டா கோவம் வராதாங்க"

அலையற்ற கடல் உண்டாங்க 
இறவாத உடல் உண்டாங்க
ஆகாயம் இல்லாத ஊர் உண்டாங்க
நீர் கலவாத மோர் உண்டாங்க 
பிழைக்கதத் தெரியாத கவிஞன் இருக்காராங்க 
கை தொடாத காதலன் இருக்காராங்க
வாழை மரத்தில் ஊஞ்சல் கட்டுவாங்களாங்க 
உலோபியின் புன்னகை கிடைக்குமாங்க?

அதுபோல தாயில்லா பிள்ளை எங்கேனும் உண்டாங்க? எல்லா உயிரும் தாயிடம் இருந்து தானேங்க பிறக்குது. பெண்களின் பொறுமை குணத்தைப் போற்றி கடவுள் பெண்களுக்கு தந்த கொடைதாங்க தாய்மை என்பது.

முன்னோக்கி நம்மை நடத்தி முதுமை செய்யும் காலங்கள் பின்னோக்கி நம்மை நடத்தி சிறு பிள்ளை ஆக்கக்கூடாதா? எதுக்கு? அம்மாவின் மடி சாய்ந்து சுகம் காணத்தாங்க. கவலையா.... கலக்கமா... கண் ணீரா.... ஆறுதலா.... எல்லோருக்கும் அடைக்கலம் அன்னை மடிதாங்க.

பெற்ற அன்னையின் சுகத்தை அவளுக்குப் பின் நமக்குத் தந்து பேணி காப்பவள் தேவ தாய்தாங்க.

ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஏவாளையும், எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே மரியாளையும் தேர்ந்து எடுத்தவர் கடவுள். ஏவாள் கடவுளின் வார்த்தையை மீறியதால் அவஸ்தைப்பட்டாள். " இதோ ஆண்டவரின் அடிமை" என்று அன்னை கீழ்ப்படிந்தாள். இன்று அகிலம் ஆள்கிறாள்.

மரியாள் அறியாத நேரத்தில் ஆண்டவரின் பிறப்பு அவளுக்கு அருளப்பட்டது போலவே இயேசுவின் இறப்பும் அவளுக்கு அறிவிக்கப்படவே இல்லை. மகனைப் பெற்றெடுத்து துன்பங்களைச் சுமந்தாளே தவிர, நீட்டிப் படுத்து அவள் மனம் நிறைவு காண வில்லைங்க.

ஆனால் இன்று ஊர்தோறும் அவள் பேர் சொல்லி போற்றுவோர் ஏராளம், ஏராளம். தன் பிள்ளைகளுக்கு ஒன்று அவசியம் தேவை என்று கண்டு கொண்டால் அதை தன் மகனிடம் போராடி பெற்றுத் தந்து விடுவாள்.

கடவுளின் வார்த்தை இறைதூதர் மூலம் மரியாளுக்கு அருளப்படுகிறது. அவர் அவளிடம் "நீ இறைவனின் மகனைப் பெற்றெடுப்பாய் என்று சொன்னதும் உடனே மரியாள் "அப்படியே ஆகட்டும்" என்று உடனே ஒத்துக் கொள்ளவில்லை. அப்படி அவள் ஒத்திருந்தால் அது வழக்கமான சந்திப்பாக இருந்திருக்கும். மாறாக வந்தது ஆண்டவரின் துாதராக இருந்தும் அவரிடம் “இது எப்படி ஆகும்? நான் கன்னி ஆயிற்றே" என்று எதிர் கேள்வி போடுகிறார், ஆகவே அந்தச் சந்திப்பு ஓர் ஆழமான சந்திப் பாக மாறிவிடுகிறது. இப்படித்தான் நம் தேவைகளுக்காக தன் மகனிடம் அழுத்தம் திருத்தமாகப் பரிந்து பேசுகிறாள்.

ஒரு குடும்பத்தில் ஒரு தாய் இல்லேன்னா விளக்கு எரிந்தாலும் அது இருளான வீடுதாங்க. தாய் இல்லாட்டி வாலிபப் பசங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பித்ததுமே வீட்டில் சொத்து பிரிப்பது வீட்டுக்கு வீடு ஒரு சடங்காகவே மாறி விடுமுங்க. நற்செய்தியில் ஊதாரி மகனின் கதை ஏன் வந்தது? அங்க ஒரு தாய் இல்லாமல்தானுங்க,

ஒரு வீட்ல வளர்ந்த, விவரம் தெரிந்த பிள்ளைகளை அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதுங்களை குடும்பத்தோடு சேர்த்து இழுத்து பிடிப்பதே ஒரு தாயின் பரிவும், பாசமும், அன்பும்தாங்க. எங்கிட்டோ தொலைதூரத்தில் இருந்தாலும் தன் சொந்த வீட்டுக்கு வரணுமின்னு நினைச்சா அந்தப் பிள்ளைக்கு அந்தத் தாயின் அன்புதாங்க காரணம். தாயன்பு மட்டும் இல் லேன்னா நல்லது கெட்டது தெரியாத வயசில உள்ள பிள்ளைங்க திக்குத் திசை தெரியாம எங்கிட்டோ ஓடிப் போயிருக்குமுங்க. ஒரு தாய் இல்லைன்னா காலா காலத்தில் பிள்ளைகளுக்கு நடக்க வேண்டிய கல்யாணம் காட்சி எல்லாம் காலாவதி ஆகி இருக்குமுங்க, கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அணைக்க வேண்டிய நேரத்துல அரவணைத்து அன்பு காட்டுபவள் அவள்தான்

இப்படிதாங்க நம் வியாகுல அன்னையும் நம்மை பரிவு காட்டி பாதுகாப்பவள். அவளைத் தேடி அவள் அன்பைச் சுவைத்தவர்கள் ஒருபோதும் தடம் மாறுவதில்லை

அவள் அருள் தேடுவோம். பாசத்தைப் பொழிவோம். பரிவைப் பெறுவோம்

அவள் அருள் தேடுவோம். பாசத்தைப் பொழிவோம். பரிவைப் பெறுவோம்!

சகோ. ஆனி

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

[email protected]

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

Add new comment

3 + 0 =