மறைப்பணியின் முக்கிய பண்பு


Pope's expression on Mission of the Church

திருத்தந்தைை பிரான்சிஸ்  தூய ஆவியாரின் ஞாயிறு 31/05/20 அன்று வழங்கிய அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் அவர் அடிக்கோடிட்டு காட்டிய திருஅவையின் மறைப்பணியின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.

மறைப்பணி என்பது

இதனை ஒரு வரியில் விளக்க வேண்டுமென்றால் கடவுள் நம் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்று வெளிப்படுத்துவதே. நம்மை அன்பு செய்யும் கடவுள் நாம் வாழ உலகை படைத்து அதை நம்மிடத்தில் ஒப்படைத்தார். காலப்போக்கில் நாம் ஆண்டவரை மறந்த நேரத்தில் அவர் தனது தூதுவர்களை அனுப்பி அவருடைய அன்பை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்.

தக்க காலத்தில் நமக்கு சரியான வழியைக் காட்டி உண்மையான அன்பை விலக்க தன் ஒரே மகனையே மனிதனாய் நம்மிடையே வாழ அனுப்பினார். இங்கு மனிதனாய் வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆண்டவரில் நம்பிக்கை அது எந்த அளவுக்கு ஆழமாக வைக்க முடியும் இறக்கும் அளவுக்கு கூட ஆழமாக ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்க முடியும் என்று வாழ்ந்தும் காட்டி விட்டார்.

அதேபோல எப்படி நம்பிக்கை வைப்பது என்பதை மகனுக்கு உரிய மகளுக்கு உரிய மனப்பான்மையோடு நம்ப நம்மை அழைத்து வழியையும் காட்டிவிட்டார்.

இன்றைக்கு மறைப்பணி

மேற்சொன்ன மறைப்பணியை எல்லோருக்கும் தெரியப்படுத்துவது இன்று நமக்கு மூவொரு இறைவனின் வழியாய் கொடுக்கப்படுகின்ற பணி. இதை செய்வதற்கு முதன்மையாய் நமக்கு தேவைப்படுவது மன்னிப்பு. அதன் வழியாய் ஒப்புரவு ஆக்கப்பட்ட குழுமமாய் இருந்து மறைப்பணியை செய்ய அழைக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த மன்னிப்பை இயேசுவின் செயலில் நாம் பார்க்கின்றோம். 

உயிர்த்த ஆண்டவர் சீடர்களுக்கு ஆவியை ஊதி உங்களுக்கு சமாதானம் என்கின்றார். இதிலே தன்னை சிலுவையின் அடியில் விட்டுசென்ற இவர்களை மன்னித்து விட்ட மனப்பான்மையும் சீடர்களுக்கு நாம் ஆண்டவரோடு ஒப்புறவு ஆக்கப்படும் என்கின்ற மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இதுவே நமக்கு ஆவியானவர் தருகின்ற பாடம்.

நான் நம்மை மன்னிக்கவும் பிறரை மன்னிக்கவும் பின்பு மறைப்பணியை சொல்லாலும் செயலாலும் எடுத்துரைக்கவும் அழைக்கின்றோம். ஒப்புரவு ஆக்கப்பட்ட குடும்பமாய் நாம் இணைந்து மறைப்பணியை செய்ய தூய ஆவியானவர் நமக்கு சக்தி தருவாராக என்று திருத்தந்தை கூறியிருக்கின்றார் அதே வேளையில் அந்த ஆவியானவரே மேல் மாடி அறை களான பாதுகாப்பான சுவர்களை விட்டு வெளியே செல்வதற்கும் துணிவை தருவானாக என்றும் வாழ்த்தி இரக்கிறார்.

ஒப்புரவு ஆக்கப்பட்ட குழுமமாய் ஆவியானவரோடு மறைபணி என்கின்ற இந்த கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.

Fr. Prakash SdC

Add new comment

3 + 0 =