Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பிலிப்பைன்ஸில் திருத்தந்தை பிரான்சிஸ்
2015 ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் 19 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் செல்லும் மூன்றாவது திருத்தந்தை ஆவார். நம் திருத்தந்தையின் பயணத்தின் நோக்கம் பரிவும் இரக்கமும். அவர் மணிலா நகரிலிருந்து மேலும் சில நகரங்களுக்கும் சென்றார். குறிப்பாக ஒலாண்டாவில் கையன் பெரும் சூராவளியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.
பிலிப்பைன்ஸ் மக்கள் திருத்தந்தை அவர்களை பிரான்சிஸ் தாத்தா என்று அழைத்தார்கள். திருத்தந்தை அவர்கள் டக்லோபன் தீவிற்குச் சென்று, அங்கு சூராவளியால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களோடு திருப்பலி நிறைவேற்றி, உணவருந்தினார்.
ஏற்கெனவே அதாவது டிசம்பர் 2014 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டிருந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் ஏழைகள் மையத்தை அர்ச்சித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்துச் சமயத்தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். மக்கலா புயலின் காரணமாக அவருடைய பயணமானது சிறிது முடங்கிப்போனது.
மணிலா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அதில் கருதினால்களும், ஆயர்களும், குருக்களும், துறவிகளும், பொதுநிலையினரும் கலந்துகொண்டனர்.
தெருவிலுள்ள சிறார்களைச் சந்தித்தார். பல சமயத் தலைவர்களைச் சந்தித்தார். சாந்தா தாமஸ் பல்கலைக்கழகத்திலிருந்து 24000 இளையோர் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய இறுதித் திருப்பலியில் ஆறு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். திருத்தந்தையின் இப்பயணம் பல்வேறு மக்களின், குறிப்பாக புயலால், சூராவளியால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களில் பரிவையும், இரக்கத்தையும் உணரும்படியாக அமைந்தது.
Add new comment