தென் கொரியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதன் முதலில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட ஆசிய நாடு தென் கொரியா. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 5 நாட்கள் பயணமாக வந்தார். அதே சமயத்தில் ஆறாவது ஆசிய இளையோர் மாநாடு இங்கு கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு வந்தபோது அந்நாட்டின் அப்போதைய முதன்மைக் குடிமகள் பார்க் அவர்களால் வரவேற்கப்பட்டார்.

கொரியன் பெனிசுலா அமைதியையும், ஒப்புறவையும் மனதில் வைத்துதான் அங்குவந்ததாக முதன்மைக் குடிமகன் மாளிகையில் பேசினார். பின்னர் சிவோல் பயணப்படகு விபத்தில் (M V Sewol Ferry Disaster) பாதிக்கப்பட்டவர்களைத் தனியாகச் சந்தித்தார். 

ஆகஸ்டு 15 ஆம் தேதி ஏறக்குறைய 50,000 மக்கள் கூடியிருந்த டேஜியான் உலகக் கோப்பை மைதானத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அப்பொழுது தொழிலாளர்களை ஒடுக்கும், புதிய வடிவில் ஏழ்மையை உருவாக்கும், மனிதத் தன்மையற்ற பொருளாதாரத் திட்டங்களை ஒதுக்கும்படி அம்மக்களுக்கு திருத்தந்தை அவர்கள் அழைப்புவிடுத்தார்கள்.

மேலும் குவாங்காமன் மைதானத்தில் கூடியிருந்த ஏறக்குறைய எட்டு இலட்சம் மக்கள் முன்னிலையில் 124 முதல் தலைமுறை கொரியன் மறைசாட்சிகளை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

Add new comment

4 + 16 =