திருத்தந்தையின் சக மனிதர் மேல் உள்ள அக்கறை


Pope Francis his concern on migrants

மனிதரை மனிதராக மதிக்க வேண்டும், ஆன்மாக்களை நோக்கி தம் சிந்தனையை திருப்ப வேண்டும் என்று தொடக்கம் முதலே வலியுறுத்தி வரும் நம்முடைய திருத்தந்தை அவர்கள் இன்றும் மக்களை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நல்ல ஆயனாகவே இருக்கின்றார்.

2020 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி அவர் அனுப்பிய ஒரு மடலில் இது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. இத்தாலியில் உள்ள உரோம் நகரில் இயேசு சபையினரின் மையத்திற்கு இவர் எழுதிய ஒரு மடல் மிகவும் உன்னிப்பாய் பார்க்க நம்மை தூண்டுகிறது.

இந்தக் கடிதத்தில் திருத்தந்தை அவர்கள் இந்த பணியை இந்த இல்லத்தார் செய்வதைக் குறித்து நன்றி கூறுகின்ற வேளையில் அவர் ஒவ்வொன்றை பற்றியும் குறிப்பிட்டு கூறுவது நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டுகிறது.

அகதியாக தன் கண்முன்னே இருப்பவரை கண்டும் கண்டுகொள்ளாத மனநிலையை மாற்றி சக மனிதனுக்கு மனிதன் என்கின்ற மாண்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும் என்றும் அவர்களும் அன்பு செய்யப்பட வேண்டும் என்றும் எண்ணத்தை மாற்றி அமைத்து அவர்கள் பக்கம் திருப்பிய பெருமைக்குரியவர் நம்முடைய திருத்தந்தை.

Add new comment

2 + 11 =