தண்ணிகாட்டுமோ நமக்கு


Water the essential for our living

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது அமர்வில் புதன்கிழமை உரையாற்றிய வத்திக்கானின் நிரந்தர பார்வையாளர் பேராயர் இவான் ஜூர்கோவிக், "நீர் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத உறுப்பு, மனிதகுலத்தின் எதிர்காலம் அதைக் காத்து பகிர்ந்து கொள்ளும் திறனைப் பொறுத்தது அது. " என்று கூறி நம்மை செயல்பட அழைத்துள்ளார்.

இந்த நிகழ்விற்காக எழுதப்பட்ட சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை எண் 75யில் , "நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மனித உரிமையை முழுமையாக உணர்ந்துகொள்வது நாடுகளின் விருப்பத்திற்கு விட முடியாது" என்று கூறுகிறது. இந்த அறிக்கை குறித்து பேராயர் ஜுர்கோவிக் கூறுகையில், “மேலும் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான சமூகத்தின்” வளர்ச்சிக்கு பங்களிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்.

"பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அடைவதற்கு பங்களிக்கும் பல வகையான வளங்கள்" பற்றி சிறப்பு அறிக்கையாளரின் குறிப்பை பேராயர் உறுதிபடுத்தினாலும் 'நீர் உரிமை' உட்பட அனைத்து மனித உரிமைகளும் மனித வர்கத்தின் அடிப்படை உரிமையில் நிறுவப்பட்டவை என்றும், வெறும் பொருளாதார நன்மை என்ற அளவிலான  மதிப்பீட்டியல் அல்ல” என்றும் அவர் கூறினார்.

பேராயர் ஜுர்கோவிக், சர்வதேச சமூகம் ஒரு புதிய வகை "இயற்கை வளங்களைப் பற்றிய ஒற்றுமையின்" தேவையை உணர வேண்டும் என்று குறிப்பிட்டார். நீர் ஆதாரங்களை நிர்வகிப்பது "சமூக பொறுப்பு, சுற்றுச்சூழல் நடத்தைக்கான மனநிலை" மற்றும் உலகளாவிய "நாடுகளிடையே ஒற்றுமை" ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. "பொதுவான நன்மையை வலுப்படுத்துவதற்கும் எதிர்காலத்திற்காக அதைப் பாதுகாப்பதற்கும்" ஒரே வழி இதுதான் என்று அவர் கூறினார்.

"இது சுயநலத்திற்கான நேரம் அல்ல, ஏனென்றால் தனிநபர்களிடையே வேறுபாடு இல்லாமல் நாம் எதிர்கொள்ளும் சவால் அனைவராலும் பகிரப்படுகிறது. […] புதுமையான தீர்வுகளுக்கு திரும்புவதன் மூலமும் ஒற்றுமைக்கு மேலும் ஆதாரம் கொடுக்கும் வாய்ப்பை நாம் இழக்காதிருப்போம். ” என்ற இந்த ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி சிறப்பு உர்பி எட் ஆர்பி சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்ட போப் பிரான்சிஸின் மேற்கோளுடன் பேராயர் ஜுர்கோவிக் தனது உரையை  முடித்தார் .

Add new comment

5 + 2 =