உயிர்களின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதை நோக்க


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெறும் இந்த நினைவு நாள் 1978 ஆம் ஆண்டில் இத்தாலிய ஆயர்களால் தொடங்கப்பட்டது, மேலும்  இந்த நாள் வாழ்க்கையை,  குறிப்பாக கருப்பையில் உள்ள உயிர்களின் முக்கியத்துவத்தை  ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கொண்டாட்டத்தின் கருப்பொருள் “வாழ்க்கையில் சுதந்திரம்”.

வாழ்க்கைக்கான தினத்தில்  போப் பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கையின் மீதான அனைத்து தாக்குதல்களிலிருந்தும் குணமடைய சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார், மேலும் பிறப்பு வீதம் குறைந்து வருவதால் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்று எச்சரிக்கிறார். அனைத்து நிலைகளிலும் உயிரைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்,

ஞாயிற்றுக்கிழமை மூவேளை மன்றாட்டுக்கு பிறகு பேசிய பிரான்சிஸ், “இத்தாலிய ஆயர்களுடன் நான் சேர்கிறேன். சுதந்திரம் என்பது நம்முடைய சொந்த நன்மையையும் மற்றவர்களின் நன்மையையும் தேடவும் அடையவும் கடவுள் நமக்கு அளித்த மிகப் பெரிய பரிசு. வாழ்க்கையின் முதன்மை, நன்மையிலிருந்து தொடங்குகிறது என்பதை நினைவு கூர்கிறேன்" என்று அவர் கூறினார்.

Add new comment

3 + 9 =