இயற்கையின் சிநேகிதன்! | Mariadhiviyadas

பெருங்காற்று அடித்த போது சீடர்களை அந்தக் காற்றையும், புயலையும் அதட்டி காப்பாற்றிய கடவுள் சுனாமி வந்தபோது ஏன் சும்மா இருந்தார்” என்று ஆசிரியர் கேட்டாராம். ஒரு மாணவன் எழுந்து "மனுஷங்க அவருக்கு அடங்கல அதான் அவரும் அடக்கல அப்படீன்னானாம். கடவுள் இயற்கைச் செல் வங்களைப் படைத்தபின் அவை அனைத்தும் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாக நற்செய்தி சொல்கிறது.

இயற்கையை ரசிப்பது என்பது ஓர் இனிமையான அனுபவமுங்க, சாதாரணமான மனநிலையையும். சந்தோஷமாக மாற்றி விடக்கூடிய வித்தை அதுக்கு இருக்குதுங்க, பெரியர்களைக்கூட சின்ன பிள்ளைகள் போல் குதூகலிக்க வைத்து விடுமுங்க. ஒரு கோழிக் குஞ்சு முட்டையின் ஓட்டுக்குள்ளிருந்து வெளி உல கத்தைப் பார்க்க முடியாது. ஓட்டை உடைத்து, வெளி யில் வந்தால்தான் அதுக்கு உலகம் புரியும். இயற்கை யும் அப்படித்தான். வெளியில் வந்தால்தான் இரசிக்க முடியும். இப்படிப்பட்ட இயற்கையோடு இணைந்து ஒரு புனிதர் வாழ்ந்தார் என்றால் அது ஆச்சரியம் தாங்க, புனித பிரான்சிஸ் அசிசியார் இயற்கையின் சிநேகிதருங்க.

அக்டோபர் 4ஆம் தேதி இந்தப் புனிதரை தாயாம் திருச்சபை பெருமைப்படுத்துதுங்க. தன் பெற்றோ ருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஒருவர்தான் இந்தப் புனிதர். தந்தை துணி வியாபாரி. பல நாட்கள் வெளி இடங்களில் வியாபாரம். அப்படி அவர் ஊரில் இல்லாத நாளில் பிறந்த அசிசியாருக்கு, அவரது தாய் தன்மகன் ஒரு சமயப் பெரியவராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜைவானி - டி-பெர்னாண்டோ என்று பெயரிட்டு திருமுழுக்கு கொடுக்கிறார். வணிகம் முடிந்து வீடு திரும்பிய தந்தை அந்தப் பெயர் பிடிக்கா மல் குழந்தைக்கு பிரான்சிஸ் என்று பெயரிட்டு அழைக்கலானார். மகன் பெரும் வணிகராக வேண் டும் என அவருக்கு விருப்பம். ஆனால் புனிதர் தன் தந்தையின் கனவைப் பொய்யாக்கித் துறவறம் பூண்டார்.

இளைஞனாக இருந்த பிரான்சிஸ் அசிசியாருக்கு பிரெஞ்சு மொழியில் சிறந்த கவிஞர் ஆக விருப் பம் இருந்ததாகக் கூறப்பட் டுள்ளது. அவருக்கு தம் தந்தையின் தொழிலிலும் நாட்டமில்லை. கல்வியிலும் அவ்வளவாக ஆர்வ மில்லை. நடுத்தர வர்க்கத் தைச் சார்ந்த இவர் உயர்குடி மக்களைப் போல ஆடம்பர வாழ்க்கை வாழவே ஆசைப் பட்டவராக இருந்திருக்கிறார்.

ஒரு சமயம் அசிசி நகருக்கும் அண்டை நகருக்கும் இடையே போர் நடந்தபோது இருபதே வயதான பிரான்சிசும் படையில் சேர்ந்து போரிட்டு ஒரு வருடம் சிறை வாழ்க்கை வாழ நேரிட்டது. அந்த ஒரு வருடம் தான் அவர் வாழ்க்கையே மாற்றி ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. உலக வாழ்க்கையில் வெறுப்பும், ஏழைகள்பால் இரக்கமுமாக அவர் பாதை மாறியது. இயேசுவைப் பின்பற்றி, தனிமையில் நீண்ட நேரம் வேண்டுதலில் செலவிடுகிறார்.

ஒரு நாள் சிலுவையில் இயேசுவின் உருவத்தை அதிக நேரம் உற்று நோக்கிய புனிதருக்கு சிலுவையில் இருந்த இயேசுவின் உதடுகள் அசைவது போலத் தோன்றியதாம். உற்றுக் கேட்டபோது “பிரான்சிஸ் என் வீடு பாழடைந்து கிடப்பதைப் பார்த்தாயா? எழுந்து சென்று அதை செப்பனிடு என்று ஒலித்த அந்தக் குரல் எங்கிருந்து வந்தது என்று சுற்றுமுற்றும் பார்த்தபோது இயேசுவே தன்னிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்த தும் "அப்படியே செய்கிறேன் ஆண்டவரே என்று பதில் அளித்தாராம்.

புனித அசிசியார் நாற்பது நாட்கள் கடினமாக நோன்பிருந்து தியானம் செய்தபோது செப்டம்பர் 14 ' ஆம் நாள் (திருச்சிலுவை உயர்த்தப்பட்ட நாள்) ஒரு காட்சி காண்கிறார். சிலுவையில் ஐந்து காயம்பட்ட இயேசுவை உற்றுநோக்கி மனம் கசிந்து ஜெபித்த போது இயேசுவின் ஐந்து திருக்காயங்களை புனிதரின் உடம்பில் வானதூதர் பதித்ததாக வரலாற்று ஆசிரி யர்கள் குறிப்பிடுகின்றனர்.

இயேசுவின் காயங்கள் பதிந்த பின் அவர் பெரும் வேதனை அனுபவித்ததாகவும், ஏற்கெனவே நோன்பி னாலும், உபவாசத்தினாலும் மெலிந்து, தளர்ந்து போய் இருந்த அவர் உடல் மேலும் வலிமை இழந்த தாகவும் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட இன்று உலகெங்கும் குடில் கட்டப்படும் பழக்கம் உள்ளது இந்த வழக்கத்தைப் பரப்பியதில் அசிசியாரின் பங்கு பெரிதும் போற்றப்படுகிறது. தெருவில் இறங்கி நடந்து சென்று இயேசுவைப் பற்றி போதித்து நிறைய போதித்து இருக்கிறார். முதன் முதலில் பன்னிரெண்டு இளை யோருடன் “சிறு சகோதரர்கள் என்ற சபையை ஆரம்பித்து நடத்திய பின்னாளில் அது துறவறச் சபையாக அங்கரிக்கப்பட்டிருக்கிறது. பெண்களுக்கான துறவறச் சபையையும் தவ முயற்சிகளை மேற்கொள்ள பொதுநிலை சகோதரிகளுக்கான மூன்றாம் சபை என்று அழைக்கப்பட்ட ஒரு அமைப் பையும் ஆரம்பித்திருக்கிறார்.

இயற்கையோடு இணைந்து இறைபுகழ் போற்றும் பிரான்சிஸ் பறவைகளுக்கு போதிக்கிறார் அவரின் “கதிரவன் கவிதை" படைப்புக்களின் கவிதை என்று அழைக்கப்படுகிறது. சூரியனை, சந்தி ரன் என்றும், சந்திரனை சகோதரி என்றும் உருவகப் படுத்துகிறார். இயற்கைப் படைப்புக்கள் அனைத்தும் து தன்னைப் படைத்த கடவுளை எந்நேரமும் மகிழ்ச்சி யாக புகழ்ந்து பாடுகின்றன என்று கூறுகிறார். கத் தோலிக்கத் திருச்சபை தவிர மற்ற பிற சபைகளும் லூத்தரினியம் சபைகளும், எல்லா சமயத்தவரும் இவரை மாபெரும் புனிதராக ஏற்கின்றனர். இவர் த திருச்சபைக்கு வழங்கிய ஒழுங்குகள் எல்லாமே இன்று வழக்கத்தில் இருக்கின்றன. இவர் இறந்து 20 வருடங்களுக்குப் பிறகே இவரைப் பின்பற்றிய சீடர்கள் புனிதரின் வரலாற்றை எழுதியதாகக் கூறப் படுகிறது.

இயற்கையை நேசித்த அசிசியாரை, இயற்கை உள்ளவரைக்கும் அவரது புகழ் பாடும்!

எழுத்து - மரிய திவ்யதாஸ்

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,
ஆசிரியர்,
இருக்கிறவர் நாமே
[email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.பெருங்காற்று அடித்த போது சீடர்களை அந்தக் காற்றையும், புயலையும் அதட்டி காப்பாற்றிய கடவுள் சுனாமி வந்தபோது ஏன் சும்மா இருந்தார்” என்று ஆசிரியர் கேட்டாராம். ஒரு மாணவன் எழுந்து "மனுஷங்க அவருக்கு அடங்கல அதான் அவரும் அடக்கல அப்படீன்னானாம். கடவுள் இயற்கைச் செல் வங்களைப் படைத்தபின் அவை அனைத்தும் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்ததாக நற்செய்தி சொல்கிறது.

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

Add new comment

1 + 1 =