வைரல் வீடியோவிற்காக இளைஞர்கள் செய்த செயல் - உயிரிழந்த நபர்


An Oldman - who was died

வைரல் வீடியோவுக்காக இளைஞர்கள் செய்த செயல் விபரீதமான தால் உயிரிழந்த நபர்.

வேடிக்கை வைரல் வீடியோ ஒன்றை உருவாக்குவதற்காக இரண்டு இளைஞர்கள் ஒருவரை ஆற்றில் பிடித்து தள்ள, நீச்சல் தெரியாத அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்கள் உக்ரைன்ல்  நடைபெற்றுள்ளது.

உக்ரைனில் ட்நிப்ரொ நதியின் மேல் அமைந்துள்ள ஒரு ஓட்டலிலன் ஓரத்தில் நிற்கும் அந்த 48 வயது மனிதரை தாக்கும் அந்த இளைஞர்கள், வேடிக்கை வீடியோ ஒன்றிற்காக அதை படம் பிடித்துள்ளனர்.

பின்னர் திடீரென அவரை நதியில் பிடித்து தள்ள, 12 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்து இருக்கிறார்.

அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் தத்தளித்து சற்று நேரத்தில் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றாலும், விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த இளைஞர்கள் இருவரையும்  கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் அதிகாரி ஒருவர் முன் பின் தெரியாத நபர் ஒருவரை, ஆற்றில் பிடித்து தள்ளி அதை தங்கள் மொபைல் போனில் படம் பிடித்த, 1993 மற்றும் 96இல் பிறந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 11 =