விளையாட்டு வினையான கதை- சுவிஸ் இளைஞர்க்கு அபராதம்


Swiss bus image

விளையாட்டு வினையான கதை இளைஞருக்கு 99 ஆயிரத்து 176 பிராங்குகள் அபராதம்

 

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் என விளையாட்டாக அறிவித்த இளைஞருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பாஸல் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று பாஸல் பகுதியில் இருந்து 26 வயது இளைஞர் ஒருவர் Arisdorf பகுதிக்கு இரவில் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட தளத்தில் பேருந்தை நிறுத்தும் பொருட்டு தனது மொபைல் போனில் விஷவாயு தாக்குதல் வெடிகுண்டு துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும் சில தினங்களுக்கு முன்னரே பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 139 அப்பாவி மக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த இளைஞனின் உரையாடல்கள் அச்சுறுத்துவதாக அமைந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ஜூன் மாதம் ஆறாம் தேதி இந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் இந்த இளைஞரின் உரையாடலில் சந்தேகம் விலகாத போலீசார் அந்த இளைஞரின் குடியிருப்பு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இருப்பினும் அந்த இளைஞருக்கு எதிராக எந்த தடயங்களும் சிக்கவில்லை. இறுதியில் தொடர்புடைய இளைஞர் மேற்கொண்டது புரளி என நிரூபணம் ஆனது.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முடிவடைந்த நிலையில், இதுவரையான அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கான இழப்புத் தொகையை அந்த இளைஞர் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சுமார் 99,176 பிராங்குகள் நீதிமன்றத்தில் செலுத்த கடந்த எட்டாம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Add new comment

9 + 1 =