வலைத்தளத்தில் ஆயிரங்கள் சம்பாதித்த பிரிட்டானிய தாயாருக்கு - அதிர்ச்சி


A Mother playing online game

பிரித்தானியாவில்  வலைத்தள விளையாட்டில் பல ஆயிரங்களை வென்ற தாயார் ஒருவருக்கு அந்த பணத்தை அளிக்க முடியாது என தொடர்புடைய நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டோக்_ஆன்_டிரெண்ட் நகரில் குடியிருந்து வருபவர் 42 வயதான டோனா கீலிங்.

இவர் தற்போது வலைத்தளத்தில் விளையாட்டு நிறுவனத்துடன் போராடி வருகிறார். 25 பவுண்டு கட்டணத்தில் விளையாடி அவருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.

ஆனால் டோனா, தமது மகனின் கடன் அட்டையை பயன்படுத்தி வலைத்தளத்தில் விளையாட்டில் ஈடுபட்டதால், வெற்றி பெற்ற தொகையை வழங்க அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வெற்றி பெற்ற தமது தொகையை திரும்ப எடுக்க முயன்ற போது அவருக்கு ஒரு மின்னஞ்சல் எச்சரிக்கை வந்துள்ளது.

அதில் குறிப்பிட்டபடியே டோனா, அந்த நிறுவனத்திற்கு அழைத்துப் பேசி உள்ளார்.

மட்டுமின்றி அவர்கள் கோரியபடியே ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.இருப்பினும் தோல்விக்கு அந்த 13,000 ஆயிரம் பவுண்ட் தொகையை வழங்க அந்த நிறுவனம் மறுத்து வருகிறது.

தமது தாயாருக்கு இணையத்தில் 13 ஆயிரம் பவுண்டுகள் பரிசு அளித்துள்ளதாக கேள்வியுற்ற அவரது மகன், இது அருமையான தருணம், கண்டிப்பாக தமக்கும், தமது சகோதரர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்வார்.

நிதி நெருக்கடியால் இதுவரை தமது பிள்ளைகளுக்கு செய்து தர முடியாதவற்றை அவர் இந்த தொகையில் கண்டிப்பாக செய்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்து நிறுவனம் கால அவகாசம் கேட்டுள்ளதுடன், வயது உள்ளிட்ட சில ஆவணங்களைக் கேட்டு உள்ளதாகவும், அவர்கள் உரிய ஆவணங்களை வழங்கிய பின்னர், குறித்த தொகையை அவர்கள் கைப்பற்றலாம் என தெரிவித்துள்ளனர்.

Add new comment

11 + 1 =