நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில் கடுமையான புயல்


நேபாளத்தில் புயல் பாதிப்பு Photo by EPA

நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில் கடுமையான புயல் 

நேபாளத்தின் தெற்கு பிராந்தியத்தில்  பாரா, பர்சா ஆகிய மாவட்டங்களில் கடுமையான புயல் தாக்கியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
 அங்குள்ள வீடுகள் கடுமையான பாதிப்புக்குள்ளானதுடன், வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக நேபாளத்தின் சிறப்பு படைகள் சம்பவ இடங்களை நோக்கி விரைந்துள்ளன.

அவசரகால உதவிகள் உடனடியாக தேவைப்படுவதாக பாரா மாவட்டத்தின் மீட்புதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக நேபாளத்தின் பிரதமர் கே.பி. சர்மா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புயலால் ஏற்பட்ட பாதிப்பை பார்க்கும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

Add new comment

9 + 4 =