தாயை இளந்த சிறுமிக்கு அரசு குடும்பத்தில் இருந்து கடிதம்


அரசு குடும்பத்திலிருந்து வந்த கடிதம்

தாயை இழந்த 4 வயது பிரிட்டானியா சிறுமிக்கு அரசு குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த எல்லா லெனான் என்கிற 4 வயது சிறுமி, அன்னையர் தினத்தன்று புற்றுநோயால் இறந்த தன்னுடைய தாய்க்கு ஒரு கடிதம் எழுதி, 'பரலோகத்தில் என்னுடைய தாய்' என்கிற முகவரியிட்டு தபால் பெட்டியில் போட்டுள்ளார்.

அதனை படமாக பிடித்த சிறுமியின் அத்தை லிண்டா ரோஸ் தன்னுடைய சமூக  வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து ஆச்சரியம் அளிக்கும் விதமாக அரண்மனையில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது.

அந்தக் கடிதத்தைப் பார்த்த உடன் சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டிருக்கும் அவர், அந்தக் கடிதத்தையும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சிறுமி மிகப்பெரிய புன்னகையுடன் தோற்றமளிக்கிறாள். இந்த உலகத்தில் அற்புதமான மக்கள் மக்களும் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. எத்துணை நன்றி கூறினாலும் ஈடாகாது எனக்கூறி பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பொதுமக்கள் பலரும், அரண்மனையிலிருந்து அந்த கடிதத்தை எழுதிய நபரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Add new comment

1 + 0 =