Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தண்ணீர் கொடுக்காமல் சிறுமியை சாகவிட்ட ஜெர்மன் பெண் தீவிரதவாதி
ஜெர்மனியிலிருந்த ஓடி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த ஒரு ஜெர்மானியப் பெண், ஒரு சிறுமியை தண்ணீர் கொடுக்காமல் தாக்கத்தால் துடித்துச் சாக் விட்ட வழக்கு இன்று முனிச் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
எட்டாம் வகுப்பு படிக்கும் போது இஸ்லாமிய மதத்தை தழுவிய ஜெனிஃபர் எனும் ஜெர்மானிய மாணவி ஜெர்மனியிலிருந்து துருக்கி சிரியா வழியாக ஈராக் சென்று அங்கு ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தார்.
அங்கு ஆயுதம் ஏந்தி பெண்கள் ஒழுங்காக உடை அணிந்து இருக்கிறார்களா என்பதை கவனிக்கும் பொறுப்பு ஜெனிபருக்கு கொடுக்கப்பட்டது.
பின்னர் துருக்கி பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டார் ஜெனிபர்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலையில், ஒருநாள், மாறுவேடத்தில் இருந்து FBI அதிகாரி ஒருவரிடம் பேசும்போது, பேச்சுவாக்கில் தான் ஒரு குழந்தையின் சாவுக்கு காரணம் ஆகிவிட்டதாக உளறிக் கொண்டிருக்கிறார் ஜெனிபர். அந்த கார் FBIக்கு சொந்தமானது.
அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக் உதவியுடன் போலீசார் ஜெனிபரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.
யாஷிடி இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகளையும் அடிமைகளாக வாங்கியுள்ளனர் ஜெனிபரும் அவரது கணவரும்.
ஒரு நாள் அந்த சிறுமி படுக்கையில் சிறுநீர் கழித்து விட, அவளை அடித்து சங்கிலியால் கட்டி பாலைவன வெயிலில் போட்டிருக்கிறார் ஜெனிபரின் கணவர்.
தண்ணீர், தண்ணீர் எனக் கதறியவாறே தாக்கத்தில் உயிரிழந்திருக்கிறாள் அந்த சிறுமி. சிறுமிக்கு தண்ணீர் தாரத்தோடு, கதறிய அந்த சிறுமியின் தாய் ஜெனிபரின் கணவர் அடித்து உதைக்க அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கி ஒன்றை வைத்து மிரட்டி இருக்கிறார் ஜெனிபர்.
நான் அதுக்காக நீ வீட்டுக்கு அனுப்பினேன் பின்னர் தனக்கும் ஒரு சிறு குழந்தை இருப்பதால், மனசாட்சி உறுத்த, ஜெனிபர் FBI அதிகாரியிடம் உளறிக் கொட்ட, அவர்களைப் பின்தொடர்ந்து காரில் இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை இன்று தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் முனிச் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கின் முக்கிய அம்சமாக ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மனைவியும் மனித உரிமைகள் வழக்கறிஞருமான முன்னாள் ஐ.ஏஎஸ் பாலியல் அடிமையாக இருந்த வரும் நோபல் பரிசு பெற்றவருமான நாடியா
முராடும் இந்த வழக்கில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
+

Add new comment