ஜமால் கசோகின் கொலையில் அரசின் புதிய முடிவு


Image of Jamal khashoggi from Uk website

சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு ஈடுகட்டும் விதமாக அவருடைய வாரிசுகளுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் வீடுகளை வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

 

உலகின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர் என அறியப்பட்ட ஜமால் கசோக்கி, அமெரிக்காவில் தங்கி சவுதி அரேபியா மன்னர் சல்மானின் ஆட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தார்.

 

இவர் கடந்த 2018ம் செப்டம்பர் 28-ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றிருந்த போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த கொலை வழக்கில் சவுதியில் இருந்து வந்த ஏஜெண்டுகள் 15 பேர் தான் முக்கிய காரணம் என கூறப்பட்டது.

அதோடு மட்டுமின்றி இந்த கொலை வழக்கிற்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

 இதனை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சவுதி அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

 

கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 11 பேரை கைது செய்துள்ள சவுதி அரசு ரகசிய நீதிமன்றம் ஒன்றில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்ன மாதிரியான தண்டனையை பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரின் மகன் சலா கடந்த ஆண்டு இறுதியில் சல்மான் மற்றும் இளவரசர் ஆகியோரை அரண்மனையில் சந்தித்தார். அந்த புகைப்படங்களை அரசு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டது.

 

இந்த நிலையில் அசோக்கின் முதல் மனைவியின் வாரிசுகளான அவரது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோருக்கு சவுதி அரசு சார்பில் நீண்ட கால அடிப்படையில் சொத்துக்கள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்துள்ளது.

 

அதன்படி சவுதியின் ஜெட்டா நகரில் 4 பேருக்கும் வீடுகளும் மாதம்தோறும் 7 லட்சம் முதல் அவர்கள் கேட்கும் தொகையை தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் 27 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் கொடுக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் வசதி குறித்து குடும்பத்தினர் எந்தவித கருத்தும் தெரிவிக்க மறுத்து உள்ளனர்.

Add new comment

1 + 0 =