சடலமாக கிடந்த தாய் மனித குரங்கு அதனிடம் பால் குடிக்க முயன்ற பரிதாப குட்டி


image of gorilla.

காட்டில் இரண்டு மனித குரங்குகள் சடலமாக கிடந்த நிலையில் அதில் ஒன்றான தனது தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்க குட்டி முயன்ற காணொளி மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.  ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள காடுகளுக்கு ஆய்வாளர்கள் சமீபத்தில் சென்றனர்.

 அங்கு உள்ள மனித குரங்குகள் எந்த அளவு ஒழுக்கமாக நடந்து கொள்கிறது என்பதை அறியவே ஆய்வாளர்கள் சென்றார்கள்.
 அப்பொழுது ஒரு இடத்தில் டைடஸ் என்ற 35 வயதான ஆண் மனித குரங்கு இறந்து கிடந்தது.

அதன் அருகிலேயே 38 வயதான டக் என்ற பெண் மனிதக்குரங்கு  இறந்து கிடந்தது. இந்த இரண்டு சடலங்களையும்   அங்கிருந்த மனித குரங்குகள் சூழ்ந்து  கொண்டதோடு சடலங்களையும் வருடியும் நக்கியும் கொண்டிருந்தன.

 இதன்மூலம் இறந்து கிடக்கும் மனித குரங்குகளுடன்  நெருக்கமாக இருக்க மற்றும் மனித குரங்குகள் விரும்புவதை ஆய்வாளர்கள் உணர்ந்தனர்.

டைட்டஸ் மனித குரங்கு  இறந்து கிடந்தது அதேபோல சடலமாக கிடந்த என்ற பெண் மனித குரங்கு அருகிலேயே இருந்த அந்த ஆண் குட்டி தனது தாயிடம் இருந்து தாய்ப்பால் குடிக்க  முயன்றதையும் காண முடிந்தது. இது குட்டியின் துயரத்தை உணர்த்தியது.

 இதுகுறித்து ஆய்வாளர்கள் விடுத்த அறிக்கையில் ஆரோக்கியமான மனித குரங்குகளும் சடலங்களாக இருக்கும் மனித குரங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்புகள் எபோலா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டு இருந்த போதும், இதுபோன்ற விஷயம் மத்திய ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மனித குரங்குகளை பாதித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உயிர் போனாலும் சரி உறவுகளுக்கு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த செயலை குரங்குகளிடம் இருந்து நாம் கற்க வேண்டும்.
 

Add new comment

4 + 1 =