உரிமையாளரை தேடும் ஆமை


Image of tortoise

சூரிச்சில் தொலைந்த ஆமை ஒன்றை கண்டுபிடித்துள்ள போலீசார் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சூரிச் நகரில் போலீசார் ரோந்து பணியில் இங்கு பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதசாரி ஒருவர், அவர்களது காரை நிறுத்தியிருக்கிறார்.

சாலை ஒன்றில் ஆமை ஒன்றை கண்டெடுத்ததாக தெரிவித்த அவர், அந்த ஆமையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் அந்த ஆமையை குறித்து விளம்பரம் வெளியிட்டும் யாரும் அதை உரிமை கோரி இன்னும் வரவில்லை.

அந்த ஆமை 22 சென்டிமீட்டர் நீளமும் 6 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

Add new comment

8 + 0 =