இன்ஸ்டாகிராமில் இளவரசரின் உலக சாதனை


Image taken from BBC

பிரித்தானிய இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதியினர் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6 மணி நேரத்தில் மில்லியன் பின்பற்றுபவர்கள் குவிந்ததன் மூலம் உலக கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை at @sussexroyal என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார்.

அதில் எங்களது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரவேற்கிறோம். பணிகள் முக்கிய அறிவிப்புகள் மற்றும் ஒளி பிரகாசிக்கும் வாய்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என முதல் பதிவை வெளியிட்டனர்.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய 6 மணி நேரங்களில் மில்லியன் பின்பற்றுபவர்கள் குவித்ததன் மூலம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

 இந்த சாதனையின் மூலம் தென் கொரியா பாப் பாடகர் கங் டேனியல் சாதனையை முறியடித்துள்ளனர். ஜனவரி மாதம் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 12 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பின்பற்றுபவர்கள்  குவிந்தனர்.

Add new comment

6 + 8 =