Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்திய மாணவிக்கு கனடாவில் அதிர்ஷ்டம்
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கனடாவில் உள்ள விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் 1 கோடி ரூபாய்க்கு வேலை கிடைத்துள்ளது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் இளைஞர் பலரும் விவசாயத்தை விடுத்து பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகின்றனர். ஆனால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கவிதா பாமன் என்கிற மாணவி lovely professional University _ல் முதுகலை விவசாய படிப்பு எடுத்து படித்துள்ளார்.
படிப்பின் மீது அதிக ஆர்வமும் கற்றல் ஆற்றலும் அதிகமாக இருந்த காரணத்தால்,கல்லூரியின் முதல் மாணவியாக கவிதா திகழ்ந்துள்ளார்.
இதனைப் பார்த்த கனடாவின் பெரிய விவசாயி நிறுவனமான monsanto canada நிறுவனம் ஒன்று ,நேர்காணல் நடத்தி கவிதாவை வருடம் ரூபாய் 1 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது. அங்கு அவர் வேளாண் இராசயன உற்பத்தியை நேர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாணவர்கள் பலரின் கனவு நிறுவனமான இதில் கவிதாவிற்கு வேலை கிடைத்திருப்பது சக மாணவர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து பேசிய கவிதா,எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கிறது.வேலைக்கு சேரும் நேரத்திற்காக காத்திருக் கிறேன். கல்வியை கற்றுக் கொள்வதற்கும் கடினமாக உழைக்கிறவர்களுக்கும் விவசாயத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Add new comment