இந்தியா விமானப்படையின் வலுவான வாதம் - பாகிஸ்தானின் F-16 விமானம் சுட்டு விழுதப்பட்டது


Indian air force army (indian times.com)

பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், மிக் 21 பைசன் விமானம், ஒரு F 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு மறுக்க முடியாத வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார்.

மேலும், பாகிஸ்தானின் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.

பாகிஸ்தானின் இன்டர் சேவை பொது தொடர்புகளின் (ஐஎஸ்பிஆர்) இயக்குநர் வெளியிட்ட கருத்துகளும், இந்திய விமானப்படையுடன் ஒத்துப் போவதாக அவர் தெரிவித்தார். தாக்குதல் நடந்த அதே நாளில் இரண்டு விமானிகள் பிடிப்பட்டதாக ஐஎஸ்பிஆர் கூறுகிறது.

"அதாவது அந்த இடத்தில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. ஒன்று மிக் 21 ரக விமானம், மற்றொன்று F 16. இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இந்திய விமானப்படையிடம் உள்ளது" என்று கபூர் தெரிவித்தார்.

முன்னதாக, F 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்று கூறுவது உண்மையல்ல என்று அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.(BBC)

 

Add new comment

3 + 2 =