Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஆச்சரியம் ஒரே நாளில் வயிறு வீங்கி பிரசவம்
பிரித்தானியவை சேர்ந்த பெண் ஒருவருக்கு வயிறு வீங்கி அடுத்த 45 நிமிடங்களில் குழந்தை பிறந்துள்ள அதிசய சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த எம்மா லூயிஸ் லெகேட் என்பவரின் வயிறு கொஞ்சம் மாறி இருப்பதை அவருடைய தாய் 16 ஜூலை 2018 அன்று அடையாளம் கண்டுள்ளார்.
ஆனால் அது கர்ப்பம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு ஏற்றவாறு அடுத்த நாட்களில் வயிறு பெரிதாகாமல் நின்றுவிட்டது.
9 மாதங்கள் கழித்து சாதாரண வயிறுடன் எம்மா தன்னுடைய படுக்கைக்கு உறங்க சென்றுள்ளார். விழித்தெழுந்தபோது திடீரென அவருடைய வயிறு பெரியதாக மாறி இருந்துள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு வயிற்றுவலியும் அதிகரித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள்ளாக கார் நிறுத்தப்படும் பகுதியிலேயே அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து விட்டது.
இது குறித்து பேசி இருக்கும் எம்மா எனக்கும் என்னுடைய கணவர் சீன் லாமோன்டிற்கு இரண்டாவது குழந்தை. அன்றைய தினம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது
கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை நான் உணரவே இல்லை. என்னை விட என்னுடைய பாட்டி நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்.
எங்களுடைய அதிர்ஷ்டம் குழந்தை நல்ல விதமாக பிறந்தது. நான் ஒருமுறை கூட கர்ப்ப பரிசோதனை எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை ஒன்றுமே தெரியவில்லை.
எனக்கு ஏன் இத்தனை நாட்களாக வயிற்று நீங்கவில்லை என மருத்துவர்கள் கூறவில்லை. குழந்தைகள் முதுகு பக்கமாக அமர்ந்து இருக்கலாம் என்று மட்டும் என்னிடம் கூறினார்கள்.
எனக்கு எந்த காலையும் வியாதி அல்லது பசி எடுத்தது இல்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆரம்பத்தில் மாத்திரைகள் பயன்படுத்தும் சமயத்தில் எனக்கு சிறிது ரத்தப்போக்கு இருந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் ரத்தம் வெளியேறுவது நின்றுவிட்டது. மாத்திரை சாப்பிட்டதால் தான் அது நின்று விட்டது என நினைத்து நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
Add new comment