Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அம்மை நோய்யால் சுவிட்சர்லாந்து மக்கள் பாதிப்பு
சுவிட்சர்லாந்தில், மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது சுகாதாரத் துறை அதிகாரிகளை கவலை அடைய செய்துள்ளது.
கடந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97 பேர் புதிதாக இந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் அதிகரிப்பு சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலை அடைய செய்துள்ளது.
மண்ணன் எனும் இந்த அம்மை நோய் கடுமையான தொற்று நோயாகும்.
இந்த பாதிப்பால் பொதுவாக காது கண் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு அபூர்வமாக கல்லீரல் நோய் மற்றும் இதய மற்றும் நரம்பு மண்டலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
இல் ஒருவர் மிக அபூர்வமாக 25 ஆயிரத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிடலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ உதவியை நாட வேண்டும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகே செல்லாமலிருப்பது நலம்.
இந்த அம்மை நோய்க்கு தடுப்பூசி போடாதவர்கள் முறையாக போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.
மண்ணன் அதிகரிப்பை தொடர்ந்து, அது மேலும் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Add new comment