அசாம் மாநில அரசின் மதுபான தடை


அசாம் மாநில அரசின் மதுபான தடை. photo from IANS

அசாம் மாநில அரசின் மதுபான தடை 

அசாம் மாநில தேயிலை தோட்டங்களில் சட்டவிரோத மதுபானம்  தயாரிப்பதற்கான முக்கிய மூலக்கூறுகளை தடை செய்திருக்கிறது அந்த மாநில அரசு . ஆனால் இந்த தடை மட்டுமே குடிப்பழக்க சோக தொடர்களை தடுக்கமுடியுமா என  திருச்சபை மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

மார்ச் 4 ம் தேதி, ஒரு மதுபான சோக நிகழ்வில் 160 பேரைக் இறந்ததுடன், பாரதீய ஜனதா கட்சியின் (பிஜேபி) அரசாங்கம் எதிர்காலத்தில் மது துயரங்களைத் தடுக்க போதை மூலப்பொருள் 
 விற்பனையையும் கையிருப்பையும் தடை செய்துள்ளது.,

பிப்ரவரி 21 ம் தேதி  சோகத்தால் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட்  மற்றும் கோலாக்கட் மாவட்டங்களை உள்ளடக்கிய திப்ருகார் மறைமாவட்டத்தின் ஆயர்  ஜோசப் ஆண்ட், "இந்த அச்சுறுத்தலைத் தடுக்க அரசாங்கத்தின்  முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.

"வெள்ளைப்பாகுக்கு மட்டும் தடை அறிவிப்பது பிரச்சினையை தீர்க்காது," என்றும் கூறினார்.

சீரிய கண்காணிப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான கடுமையான தண்டைனைகளுமே  அவசியம், என்றார் ஆயர்.

160 பேர் உயிரிழந்ததைத் தவிர, சுமார் 350 பேர் உடல் ரீதியாக முடங்கிவிட்டனர். பலர் குருடர்களாகவும்  மற்றும் பலர் நிரந்தரமாக சேதமடைந்த கல்லீரல், சிறுநீரக மற்றும் பிற உள் உறுப்புகளுடன் வாழ்கின்றன.

பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் விழிப்புணர்வில்லாத தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்.

இறந்தவர்களில் இரண்டு பெண்கள் உட்பட எட்டு கத்தோலிக்கர்கள். குறைந்தது 54 கத்தோலிக்கர்கள் உள்ளுறுப்புகள்  பாதிக்கப்பட்டிருப்பதாக  திருச்சபை அதிகாரி கூறினார்.
கல்வி அறிவில்லாத இந்த மது அடிமைகளுக்கு இத்தடையால் இந்த பகுதியில் மது ஒழிக்கப்படுமேயானால் இது ஒரு வரமே.

.

Add new comment

10 + 7 =