ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும் 10 வயது சிறுமிகள் வெளியான பகீர் பின்னணி 


image from feralgang.com explaining child marriage

ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படும் 10 வயது சிறுமிகள் வெளியான பகீர் பின்னணி 

நைஜீரியாவில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை உணவுக்காகவும் பட்ட கடனுக்காகவும் தாத்தா அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவது அம்பலமாகி உள்ளது.

 இந்த திருமணத்திற்காக சிறுமிகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் விளம்பரம் செய்து வருவதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நைஜிரியாவின் ஒபாங்லிகு   சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 17 கிராமங்கள் அமைந்துள்ளன.
 இங்கே பேச்சேவ்  சமூகத்தினர் பெரும்பான்மையாக குடியிருந்து வருகின்றனர்.
 அவர்களே தங்களின் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை உணவுக்காகவும் பணத்திற்காகவும் வாடிக்கையாக பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
  இந்த சிறுமிகளின் புகைப்படங்களை அவரது தந்தை அல்லது உறவினர் கள் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கின்றனர்.
 இவ்வாறு விளம்பரம் செய்யப்படும் சிறுமிகளை முதியவர்கள் பலர் தங்களின் மனைவிகளாக வாங்கி செல்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

 மோனிகா மற்றும் அவரது சகோதரியை பெற்றோர், கடனுக்காக தூரத்து உறவினர் ஒருவர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

  இந்த இரு சிறுமிகளையும் வாங்கிய நபர் ஒரு மாத இடைவெளியில்  இருவரையும் வயதான இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

 சுமார் ஓராண்டுகாலம்  அவருடன் வாழ்ந்த மோனிகா அங்கிருந்து தப்பி நண்பர் ஒருவருடன் தற்போது வசித்து வருகிறார்.

 பொதுவாக பேச்சேவ் சமூகத்தினர் வயதுக்கு வந்த தங்களது பெண் பிள்ளைகளை திருமண வயதுக்கு வந்த ஆண்களிடம் காண்பித்து குறிப்பிட்ட தொகைக்கு பேரம் பேசியதாக கூறப்படுகிறது.

 இதில் அதிக தொகை வழங்க தயாராக ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

 ஆனால் சமீப காலமாக அந்த வழக்கம் தொலைந்துபோய்விட்டது.
 உணவுக்காகவும் பட்ட கடனுக்காகவும் தங்கள் பெண் பிள்ளைகளை விற்பனை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 இதில் சில பெற்றோர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி தங்களது பிள்ளைகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க வருத்தமான செய்தி.

Add new comment

1 + 19 =