முதன்மைப்படுத்துதலின் அ ஆ இ ஈ உ முறை - சிகரம், ஒரு மூங்கில் மரம் 9

உங்கள் திட்டமிதல் அட்டவணையில் உள்ள வேலைகளை முதன்மைப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு நாளும் நீங்கள் அஆஇஈஉ முறையைப் பின்பற்றுங்கள். எல்லாம் எளிமையாகிவிடும். அ, ஆ, இ, ஈ, உ முறை அப்படின்னா என்ன? நம்முடைய இலக்கிற்கு, நம்மை மாமனிதராக உருவாக்கும் முயற்சியில் நாம் எவ்வாறு முதன்மைபடுத்தவேண்டும் என்பதற்கான ஒரு வழிமுறையே இந்த முறை...

அ    – அதிக முக்கியத்துவம் (நம்முடைய இலக்கின் அச்சாரமான செயல்பாடு எது).
ஆ   – ஆனாலும் முக்கியம் (நம்முடைய இலக்கின் அச்சாரமானதல்ல, ஆனாலும்  அவசியமானது, உறுதுணையானது).
இ    – இயல்பானது (இவற்றை செய்வதால் நம்முடைய இலக்கை பாதிக்காது, ஆனால்  நமக்கு கொஞ்சம் ஆறுதலாகவும், உற்சாகமாகவும், ரிலாக்ஸ் செய்யும் செயல்).
ஈ    – ஈடு செய்யக்கூடியது (இந்தச் செயலைச் செய்வதற்கு நாம் மற்றவர்களின் உதவியை நாடலாம். நாம்தான் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை). 
உ    – உண்மையில் தேவையில்லாதது (நமக்கு அது தேவையில்லாதது. அதைச் செய்வதால் நாம் நம்முடைய இலக்கிலிருந்து திசைமாறிச் செல்வதற்கான வாய்ப்புகள்            உண்டு. எனவே இந்த செயல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும்).

இந்த முறையை இலக்கை நிர்ணயிக்க, உறவுகளை சரிசெய்ய, வாழ்வை நெறிப்படுத்தவும் பயன்படுத்தலாம்.
 

Add new comment

11 + 8 =