சிகரம், ஒரு மூங்கில் மரம் 1:  சின்னச் சின்ன ஆசை, சிகரம் தொடும் ஆசை

சிகரம் தொடுவது என்பது சின்னச் சின்ன ஆசைகளின் தொகுப்புதான். இன்னும் சொல்லப்போனால், அது சின்னச் சின்ன முடிவுகளின் தொகுப்பு. நம்முடைய முடிவுகளை நாம் அந்ந அந்த நேரத்தில் எடுத்து, நம்முடைய இலக்கை நோக்கி பயணித்தால் சிகரம் தொலைவிலும் இருக்காது, அது எப்பொழுதும் பெரிய ஆசையாகவும், பேராசையாகவும் தோன்றாது.

சிகரம் தொடுவது என்பதன் படிநிலையை சீன மூங்கில் மரத்தினுடைய நிலைக்கு ஒப்பிடலாம். சீன மூங்கில் மரம் 5 ஆண்டுகள் பூமியின் உள்ளே வேரூன்றி வளர்ந்த பின்னர், ஆறே மாதத்தில் பூமிக்கு வெளியே பல அடித் தூரம் மிகவும் சக்தியுள்ளதாக வளர்கிறது.

அதுபோல பல சின்னச் சின்ன சரியான முடிவுகளால் நம்முடைய பழக்கங்களையும் பண்புகளையும், நம்முடைய மூளையையும் பண்படுத்தியபின்பு, சட்டென்று நாம் உயரே வளர்வோம், சிகரத்தை தொடுவோம். அப்பொழுது யாரும் நம்மை எட்டிப்பிடிக்கமுடியாது.

Add new comment

1 + 1 =