Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மகிழ்ச்சி = இழப்பு – அழுகை – இறுதிச்சடங்கு?
முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள் மானுடவியல் பார்வையில் நம்முடைய கவலைக்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் காரணம் நாம் நம்முடைய இழப்புகளுக்கு சரியான இறுதிச்சடங்கு செய்யவில்லை என்பதனை காணொளிக் காட்சியின்மூலம் தந்திருக்கிறார்கள். அவற்றின் சுருக்கமே இந்த வார்த்தைகள்).
நாம் முழுமையாக அழவேண்டும். உள்ளத்தில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் அனைத்தையும் அள்ளி வெளியே எறியப்படக்கூடிய அளவுக்கு அழவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
ஏன்? நம் வாழ்வில் எத்தனையோ தேவையானவற்றை எல்லாம் பெற்றுக்கொண்டாலும், விரும்பிய ஒன்றை தேர்ந்து வாழ்ந்தாலும், எல்லாம் இருந்தாலும். நம்மிலே ஒரு இலையோடிய சோகம் இருக்கும். கேட்டால், நான் விரும்பியவரைத் தான் திருமணம் முடித்திருக்கிறேன். சந்தோசம் இல்லை. நாம் விரும்பிய வேலையைத் தான் பெற்றுக்கொண்டேன் ஆனால் திருப்பதியில்லை. எல்லாம் இருந்தும் நம் வாழ்வில் ஏன் மனதில் ஒரு சோகம் இருக்கிறது.
நம் வாழ்வில் பல இறப்புகள், இழப்புகள் நிகழ்கின்றன. ஆனால் அதற்கு முழுமையான இறுதிச்சடங்கு நாம் நிகழ்த்தவில்லை. அதற்கெல்லாம் நாம் அழவில்லை. இதைப்பற்றி உளவியலாளரும், மானுடவியலாளரும் ஒரு ஆழமான படிப்பை மேற்கொண்டுள்ளார்கள். எல்லாம் இருந்தும் ஏன் சோகமாக இருக்கின்றோம். ஏன் மகிழ்ச்சி இருப்பதில்லை. ஏன் ஒரு அன்பு நிலைக்கவில்லை. அதற்கெல்லாம் காரணம் நாம் நம்முடைய இழப்புகளுக்கும் இறப்புகளுக்கும் முழுமையாக அழவில்லை, முறையான இறுதிச்சடங்கு நடத்தவில்லை என்கிறார்கள்.
ஹென்றி நியூவன் சொல்கிறார்: Mourn my people mourn. அழுங்கள் முழுமையாக அழுங்கள். உங்கள் இதயத்தின் அழத்திலிருந்து எல்லா விசங்களும் பீரிட்டு வரும்வரை அழுங்கள் என்கிறார்.
நாம் இழப்புகளை அதிகமாக சந்தித்திருப்போம்: நீங்கள் ஒருவரை காதலித்திருப்பீர்கள். வீட்டில் வேறொருவரை திருமணம் செய்யச் சொல்லுவார்கள். நீங்கள் அதை அப்படியே மறைத்துவிட்டு, நீங்கள் வேறொருவரைத் திருமணம் செய்திருப்பீர்கள். உங்கள் வாழ்வில் திருப்தியிருக்காது.
இன்ஜினியரிங் படிக்கணும் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் படிக்கமுடியவில்லை. பத்தாண்டுகள் கழித்து படித்திருக்கவேண்டும் படிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். இன்ஜினீயரிங் என்ற சாவைப் பிணமாக தாங்கிக்கொண்டிருப்பீர்கள். நீங்கள் விரும்பி ஒருவரைப் அன்பு செய்து, பின் பிரிந்திருப்பீர்கள். பிரிவைப் பிணமாக தாங்கிக்கொண்டிருப்பீர்கள்.
இப்படி இழப்புகளையெல்லாம் பிணங்களாக உங்கள் உள்ளத்தில் அடிக்கி வைத்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் உள்ளத்தில் ஒரு சோகம் உருவாகக் காரணம். அதனால்தான் உங்கள் இழப்புகளைப் பற்றி பேசி, சிந்தித்து, அழுது, உங்களுக்குள் இருப்பவற்றையெல்லாம் கொட்டி ஒரு முறையான இறுதிச் சடங்கு நடத்தவேண்டும் என்கிறார்கள். ஏனென்றால் இழப்புகள் உங்கள் உள்ளத்திலே உடலிலே ஒரு டாக்சிக் எலமென்டாக இருக்கும் என்கிறார்கள்.
மானுடவியலாளாகள் என்னச் சொல்கிறார்கள் என்றால், வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் சரிவிகிதமாகக் கொடுக்கப்படுகிறது. அதில் பிறப்புகள் அதிகமாக இருக்கின்றபோது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதில் இறப்புகள் இழப்புகள் அதிகமாக இருக்கும்போது நம்முடைய வாழ்க்கை சோகமாக மாறுகிறது. எல்லா உணவு இருந்தும் சாப்பிட பிடிக்கவில்லை என்று சொல்கிறோமே, அப்படிப்பட்ட உணர்வு ஏற்படும். அந்த உணர்வைக் கழுவி எடுப்பதற்கு இறுதிச் சடங்கு அவசியம்.
இறுதிச்சடங்கில் என்ன நிகழ்கிறது. ஹர்ட்ஸ் என்ற மானுடவியலார் இந்தனேசியா பழங்குடியினரைப் பற்றி படித்து நிறைய எழுதியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால் ஒவ்வொரு இறுதிச் சடங்கிலும் சடங்குகள், குறியீடுகள் இருக்கிறது. இறந்தவுடன் அவரை குளிப்பாட்டி நன்றாக சுத்தம் செய்து, அவர் எதையெல்லாம் விரும்பினாரோ அதையெல்லாம் சவப்பெட்டியில் போட்டு புதைக்கிறார்கள். இது ஒரு சடங்காக இருக்கிறது.
அன்றிரவு அந்த உடலை வைத்துக் கொண்டு அழுகிறார்கள், நடனமாடுகிறார்கள், பாடல் இசைக்கிறார்கள், ஒப்பாரி வைக்கிறார்கள். இவையெல்லாம் எதைக் குறிக்கிறது என்றால் அவர்கள் உள்ளத்தில் இருக்கின்ற இழப்புகளை தங்கள் உள்ளத்திலிருந்து எறிவதற்கான அறிகுறியாக இதைச் செய்கிறார்கள். அதனால் நாம் நம்முடைய இழப்புகள் அனைத்திற்கும் அதற்கான சரியான இறுதிச்சடங்கை செலுத்தாமல் விட்டுவிட்டால், அந்த இறுதிசடங்கு தருகின்ற நேர்மறையான உணர்வைப் பெற்றுக்கொள்ளவிட்டால், நாம் நிறைவைப் பெறமுடியாது.
இழப்புகளுக்கு சரியான இறுதிச் சடங்குகளைச் செய்திருக்கின்றோமா? இழப்புகளைப் பற்றி சிந்தித்து பலரிடம் பேசி, அழுது கொட்டித்தீர்திருக்கின்றோமா? அதற்கான வழி என்னவென்றால், நமக்குள்ளே ஒரு பயணம் செய்யவேண்டும். Intensive inward Journey வேண்டும். நம்முடைய இழப்புகளை நினைத்து அழுது அழுது தீர்க்கவேண்டும். We need to sufficiently cry and we have to sufficiently mourn the loss. Toxic element வெளியேறிவிடும். Toxic Free ஆக மாறிவிடுவோம். கொரோனாவில் இழந்தவற்றிற்கு எப்படிப்பட்ட இறுதிச்சடங்கை நடத்தப்போகிறோம்.
இறுதிச்சடங்கை சரியாக நடத்தவில்லை என்றால், கார்கள் இருக்கும், பங்களா இருக்கும், பஞ்சு மெத்தை இருக்கும், நமக்குப் பிடித்தவர்கள் பக்கத்தில் இருப்பார்கள். ஆனால் You will feel loneliness. நாம் தனிமையை உணர்வோம், மகிழ்ச்சி இருக்காது. இழப்புகளுக்கு சரியான இறுதிச்சடங்கு நிகழ்த்தி, இழப்புகளைப் பற்றி பேசி அழுது கொட்டித்தீர்த்துவிட்டால் நாம் வாழ்வது நிறைவான வாழ்வாக இருக்கும்.
மனிதன் கவலை நீக்கி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும். வாழமுடியவில்லை. காரணம் அவன் இழப்புகளுக்கு சரியான இறுதிச்சடங்கு நிகழ்த்தி, அழுது அழுது கொட்டித்தீர்க்கவில்லை என மானுடவியல் பார்வையில் நம் வாழ்வோடு இயைந்த அனுவப் பகிர்வாகத் தந்திருக்கிறார்கள் முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள்.
ஆழமான கருத்துகள் கொண்ட இந்த பகிர்வை பிறருடன் பகிர்வோம். நம்முடைய கருத்துகளையும் தெரிவிப்போம். இழந்த மகிழ்ச்சி திரும்பப் பெற நாம் காரணம் ஆவோம்.
Facebook: http://youtube.com/VeritasTamil
Twitter: http://twitter.com/VeritasTamil
Instagram: http://instagram.com/VeritasTamil
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://www.RadioVeritasTamil.org
Blog: http://tamil.rvasia.org
**for non-commercial use only**
Add new comment