வைரஸ் காட்டும் வாழ்வியல்

கொரோனா காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் முனைவர் ஜோ அருண் சே.ச. அவர்கள் மானுடவியல் பார்வையில் வழங்கிய எதார்த்தமான, நடைமுறைக்கு ஏற்ற வழிகாட்டுதலின் சுருக்கம். தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.

கொரோனா முடக்கம் மனித வாழ்வியலைச் சிதை;திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். நாம் அனைவரும் அறைக்குள் முடக்கப்பட்டிருக்கிறோம். சுய தனிமையில் இருக்கிறோம். ஒன்றாக இருந்த நாம் சமூக இடைவெளியில் இருக்கிறோம். நெருக்கம் மனஇறுக்கத்தை உருவாக்கியிருக்கிறது. எனவே குடும்பங்களில் அழுத்தங்கள் உருவாக்கியிருக்கிறது.

இந்த கொரோனா தொற்றினை ஒரு பொருளாதார தாக்கமாகவோ, அரசியல் நகர்வாகவோ பாhக்கக்கூடாது. இது ஒட்டுமொத்த உலகையே பாதித்திருக்கிறது. யாரையும் விட்டுவிடவில்லை. பணக்காரன், ஏழை, அரசன், சமானியன் என்று அனைவரையும் எந்த வேறுபாடின்றி பாதித்திருக்கின்றது. எப்படி கையாள்வது என அலைபேசி வழியாகவும், சமூக வலைதளங்கள் வழியாகவும் பல நண்பர்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகளின் பதிலுக்கான தேடலே இந்த பதிவு.

இது மனஅழுத்தத்தை உருவாக்கியிருக்கின்றது. மனசிதைவை உண்டு பண்ணியிருக்கின்றது. என் மனைவியை, பிள்ளைகளை இதுவரை புரிந்ததைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. இதுவரை புரிந்ததைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. இங்கே என் நண்பர்களுக்குக் கொடுத்து, அவர்களும் பயிற்சி செய்கின்ற ஒருசில வழிமுறைகளை உங்களுக்குத் தருகிறேன்.

1. நாம் மனித வாழ்வைப் பார்க்கின்றவிதம் மாறவேண்டும். இதுவரை வாழ்க்கையைப் பயணத்தில் செலவழித்திருக்கும். அந்த முறை மாறவேண்டும். நகர்வுபோய் இருப்புமட்டும்தான் இப்பொழுது இருக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று வாழ்க்கைமுறையாகக் கொள்ளவேண்டும். ஒரு சிறைக்கைதி அவனுடைய அறையையே வீடாக மாற்றி, 12 ஆண்டுகள் வாழமுடிகிறது. அப்படியென்றால் விக்டர் பிராங்கிள் சொல்வார் - என்னுடைய வாழ்வை நான் முடிவுசெய்துகொள்வேன். சிறையை என்னுடைய வீடாகமாற்றுவேன். எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. இதுவரை நகர்விலிருந்த நாம் வீட்டிலிருந்தே தொலைத்தொடர்பு வழியாக நம்முடைய வாழ்க்கையை ஆரம்பிக்கவேண்டும்.

2. தனிமை: பலரோடு தொடர்பில் இருந்தோம். இப்பொழுது நம்முடைய உலகம் மிகவும் சிறியதாக மாறியிருக்கிறது. தனிமை நம்முடைய திசுக்களை சாகடித்துவிடும். தனிமையை உணராமல் இருக்க நாம் சில யுக்திகளைக் கையாளவேண்டும்.

குடும்பமாக உரையாடவேண்டும். இதனால் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரையும் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்திராத பல நல்ல விசயங்களை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

3. திறன்களை வளர்க்கலாம். சமைப்பதாக இருக்கலாம். மற்ற வேலைகளைச் செய்யலாம். புதிய பழக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய பழக்கங்கள், மாற்றங்கள் இனிமையானதாக இருக்கும். பல பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காவர்டு பல்கலைக்கழகம் பல இலவச திறன்வளர் வகுப்புகளைக் கொடுக்கிறது. அவற்றினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பட்டியலிட வேண்டும். இகிக்காய் என்ற தத்துவத்தை ஜப்பானியர்கள் பின்பற்றுகிறார்கள். எனவேதான் அவர்கள் 98 முதல் 110 வயதுவiர் வாழ்கிறார்கள். அது என்னவென்றால் எதற்காக வாழ்கிறோம் என்பதனை நாம் தெளிவாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். அப்பொழுது ஒவ்வொரு நாளும் அருமையாக அமையும்.

5. தியானம் செய்யலாம். குடும்பமாக செபம் செய்யலாம். காலை முதல் மாலை வரை குடும்பமாக அமைதியாக இருந்து பார்க்கலாம். பலரும் இதை நன்றாக இருக்கிறது என்கிறார்கள். அமைதியான வாழ்க்கைக்குள் நுழையுங்கள். உங்களுக்குள் ஒரு பயணத்தைத் தொடருங்கள். அமைதியாக இருப்பது மிகவும் கடினம்.

6. உடலைப் பாதுகாக்கின்ற, சுத்தமாக வைத்திருக்க ஒரு வாய்ப்பாக கருதுங்கள். நமக்கு சக்கரை வந்தால்தான் நடக்கின்றோம். ஆனால் இப்பொழுது நாம் எவ்வாறு இருந்தாலும், நடக்கவேண்டும், சுத்தமாக இருக்கவேண்டும், தும்மல் வந்தால்கூட எப்படிப் பார்க்கவேண்டும் என்பவற்றைப் பற்றியெல்லாம் ஒரு விளிப்புணர்வு வந்திருக்கிறது. சாப்பாட்டினைப் பற்றிய தெளிவு வந்திருக்கிறது. இது மனதைச் சுத்திகரிக்கும். கொரோனா முடக்கம் முடியும்போது புதிய நீங்கள் மனிதர்களாக வெளிவருவீர்கள்.

நன்றி: முனைவர் ஜோ அருண் சே.ச.

Facebook : http://youtube.com/VeritasTamil Twitter : http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website :http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org

Add new comment

16 + 1 =