கிறிஸ்தவம் மதமா?


Christiantiy - Religion?

கிறிஸ்தவத்தை மதமென்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.
அறியாத சிலர் அதை ஆமாம் என்றும் ஆமோதிக்கிறார்கள்.
கிறிஸ்தவம் என்பது மதமில்லை
மிதமான வாழ்வு என்பதை யாவருக்கும் உரைப்போம்.
எல்லா மதங்களுக்கும் மறை நூல்கள் உண்டு.
அது செப்பிலோ, ஓலையிலோ, அச்சிட்ட தாளிலோ எழுத்தாக மட்டுமிருக்கும்.
விவிலியம் மட்டுமே உயிரும் உண்மையுமான வாழ்வாக இருக்கிறது.
அதனால்தான் வாசிக்கும்போதெல்லாம் உயிருள்ள சொற்றொடர்களென உச்சரித்துத் தொடங்குகிறோம்.
வாழ்ந்துபோன யாரோ ஒருவரின் வாய்வழிச் சொல்லல்ல விவிலியம்.
வார்த்தையில் உருவாகி என்றும் வாழும் இறைவனின் வாழ்வியல் தத்துவமே அப்புத்தகம்.
ஒரு தனிமனிதன் தன்னை யாரென உலகிற்குணர்த்த பல்வேறு அட்டைகளைப் படுத்திக்கொள்கிறான்.
கிறிஸ்துவைப் பின்பற்றுவனுக்கு
ஆதார் முதல் அனைத்து அட்டைகளிலும்
அன்பு, கருணை, பணிவு, பரிவு என்றே அச்சிடப்பட்டிருக்கும் அதுதான் கிருஸ்தவம்.
இன்மை,மறுமை இரண்டு வாழ்வுக்குமான இறை இணையத் தொடர்புக்கு எப்போதும் நாடுவோம் கிறிஸ்தவத்தை.
எல்லாருக்கும் சொல்வோம்
அதன் மகத்துவத்தை.

கவி.வளநாடன்
காரைக்குடி

Comments

வறவேற்இன்றேன்

Add new comment

13 + 3 =